Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ஆண், பெண் அவசியம் அறிந்து வைத்துக் கொள்ள வேண்டிய சாஸ்திரக் குறிப்புகள்!

#image_title

ஆண், பெண் அவசியம் அறிந்து வைத்துக் கொள்ள வேண்டிய சாஸ்திரக் குறிப்புகள்!

*வீட்டில் குலதெய்வ படத்தை வைத்து தினமும் விளக்கேற்ற வேண்டும்.

*காலை நேரத்தில் கந்தசஷ்டி கவசம், பெருமாள் மந்திரம் கேட்பது நல்லது.

*வீட்டில் தினமும் பூஜை செய்வதினால் நிம்மதி, முன்னேற்றம் ஏற்படும்.

*மங்களகரமான வெள்ளிக் கிழமை நாளில் மங்கையர்கள் பிறருக்கு காசு கொடுப்பதை தவிர்க்க வேண்டும்.

*அண்டை வீட்டு விஷயங்களை தங்கள் வீட்டில் பேசுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

*வருடத்தில் இரு முறையாவது குலதெய்வ கோயிலுக்கு சென்று வழிபாடு மேற்கொள்ள வேண்டும்.

*அதிகாலை நேரத்தில் வரமிளகாயை பிறருக்கு கடன் கொடுக்காதீர்கள்.

*எந்த ஒரு கிழமையிலும் பிறருக்கு உப்பை கடன் கொடுக்கவோ.. பிறரிடம் இருந்து உப்பை கடன் வாங்கவோ கூடாது.

*வெள்ளிக்கிழமை நாளில் வீட்டு பூஜை அறையில் உள்ள தெய்வங்களுக்கு சர்க்கரை பொங்கல், பாயாசம் உள்ளிட்டவற்றை நெய்வேத்தியமாக படைக்க வேண்டும்.

*வீட்டு பூஜை அறையில் லட்சுமி உருவம் பொறித்த வெள்ளி நாணயங்களை வைப்பது நல்லது.

*பணம் வைக்கும் இடத்தில் ஒரு கிண்ணத்தில் கல் உப்பு கொட்டி ரூபாய் நாணயம் ஒன்று வைத்தால் அதன் வரவு பல மடங்கு அதிகரிக்கும்.

Exit mobile version