தவான் பேட்டிங்கில் திருப்தியடையாத ரோஹித் ஷர்மா… பேச்சுவார்த்தை நடத்தும் பிசிசிஐ !
இந்திய அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள ரோஹித் ஷர்மா அணியின் பேட்டிங் அணுகுமுறையை மாற்றுவதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரராக அனைத்து பார்மட்களிலும் இருந்து வந்த தவான் தற்போது ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடி வருகிறார். சமீப காலமாக அதிக கிரிக்கெட்டில் விளையாடவில்லை. சமீபத்தில் அவர் 97 ரன்கள் சேர்த்து பார்முக்கு திரும்பிய நிலையில், அவரது அணுகுமுறை ஏற்கனவே விவாதப் புள்ளியாக மாறியுள்ளது.
வழக்கமான கேப்டன் ரோஹித் ஷர்மா அணி ஆக்ரோஷமாக விளையாட வேண்டும் என்று விரும்புகிறார், அதே நேரத்தில் தவான் பிடித்து நிதானமாக விளையாட விரும்புகிறார். இது கவனிக்கப்படாமல் போகவில்லை. 2023 உலகக் கோப்பையை மனதில் கொண்டு வெஸ்ட் இண்டீஸ் தொடருக்குப் பிறகு தவானின் எதிர்காலத் திட்டங்கள் குறித்து தேர்வாளர்கள் அவரிடம் பேசி அவரின் ஆட்டப்போக்கை மாற்ற ஆலோசிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.
மேலும் இது சம்மந்தமாக ”ஷிகர் மற்றும் ரோஹித்துக்கு இடையே எந்த பிரச்சனையும் இல்லை. இருவருக்குமே வெவ்வேறு பாணியில் விளையாடுபவர்கள். இது ஒரு மோசமான விஷயம் அல்ல. ஆனால் ஆம், ஜிம்பாப்வே சுற்றுப்பயணத்திற்குப் பிறகு ஷிகரின் எதிர்காலத் திட்டங்களைப் புரிந்துகொண்டு அவருடன் அமர்ந்து பேசுவோம். அவர் பேட்டிங் அணுகுமுறையை மாற்ற வேண்டும் என்றால், விக்ரம் ரத்தோரும் ராகுல் டிராவிட்டும் அவருடன் பேச உள்ளனர். நாங்கள் தலையிட மாட்டோம், ”என்று தேர்வுக் குழு வட்டாரத்தில் சொல்லப்படுகிறது.