Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

அரபு நாடுகளுக்கு கப்பல் போக்குவரத்து தொடக்கம்! கேரளா மாநில அரசு திட்டம்!!

#image_title

அரபு நாடுகளுக்கு கப்பல் போக்குவரத்து தொடக்கம்! கேரளா மாநில அரசு திட்டம்!

அரபு நாடுகளுக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்தை தொடங்குவதற்கு கேரளா மாநில அரசு முயற்சி செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. விமானக் கட்டணம் அதிகளவு உள்ளதால் கப்பல் போக்குவரத்து தொடங்க கேரள அரசு திட்டமிட்டுள்ளது.

இது தொடர்பாக கேரள மாநில அமைச்சர் அஹமது தேவர்கோயில் அவர்கள் “பண்டிகை தினங்களில் விமான நிறுவனங்கள் சாமானிய மக்களிடம் அதிக அளவு கட்டணங்கள் வசூல் செய்கின்றது. இதனால் வெளிநாட்டு பயணத்திற்கு அதிகளவு பணத்தை செலவு செய்ய வேண்டி உள்ளது.

இதனால் கேரளாவில் இருந்து அரபு நாடுகளுக்கு கப்பல் போக்குவரத்து தொடங்குவது குறித்து நேற்று(மே31) உயர்மட்ட குழுவுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. வெளிநாடு வாழ் கேரளா விவகாரத்துறை அமைச்சகத்துடன் இணைந்து இந்த கப்பல் சேவை தொடங்கப்படும்” என்று கூறியுள்ளார்.

 

Exit mobile version