Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

சீரடியில் தரிசனத்திற்கு வந்த 88 க்கும் அதிகமானவர்கள் மாயம்?

இந்தியாவின் முக்கியத்துவம் வாய்ந்த திருத்தலமாக விளங்குகிறது மகராஷ்டிர மாநிலம் அகமதுநகர் மாவட்டத்தில் உள்ள சீரடி. இங்குள்ள புகழ்பெற்ற சாய்பாபா கோவிலுக்கு, வெளிநாடுகளிலிருந்தும், உள்ளூரிலிருந்தும் தினமும் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் தரிசனத்திற்காக வருகின்றனர்.

இதனிடையே இந்தூரை சேர்ந்த மனோஜ்குமார் என்பவர் தரிசனத்திற்காக சீரடிக்கு சென்ற தனது மனைவி மாயமானது தொடர்பாக பம்பாய் உயர்நீதிமன்றத்தின் அவுரங்காபாத் கிளையில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கின் விசாரணை நீதிபதிகள் டி.வி.நளவாடே, எஸ்.எம்.கவான்ஹே ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. 

அப்போது சீரடியில் தரிசனத்திற்கு வந்த 88 பேருக்கும் அதிகமானவர்கள் கடந்த ஓராண்டில் மாயமாகியுள்ளதாக தெரியவந்துள்ளது, இவர்கள் உடல் உறுப்புக்காக கடத்தப்பட்டனரா என்பது குறித்து காவல்துறையினர் விசாரிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும் மாயமானவர்களில் ஒரு சிலர் கண்டறியப்பட்டுள்ளனர், மீதம் இருப்பவர்களில் பெரும்பாலனவர்கள் பெண்கள், குழந்தைகளாக இருக்கின்றனர். இதற்கு பின்னால் கடத்தல்காரர்கள் இருப்பதாக சந்தேகம் இருந்தால் சிறப்பு குழு ஒன்றை காவல்துறையினர் அமைத்து இது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்று பம்பாய் உயர்நீதிமன்ற அவுரங்காபாத் கிளை உத்தரவிட்டுள்ளது. 

வழக்கின் விசாரணையை அடுத்த மாதம் 10ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர், அன்றைய தினம் இது தொடர்பான விசாரணை அறிக்கை சமர்ப்பிக்கபட வேண்டும் என்று அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version