Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

சிவசேனா தலைவர் சுதீர் சுரி மர்ம நபரால் சுட்டு கொலை

Sudhir Suri

Sudhir Suri

சிவசேனா தலைவர் சுதீர் சுரி மர்ம நபரால் சுட்டு கொலை

அமிர்தசரசில் சுல்தான்வின் என்ற பகுதியில் இந்து வழிபாட்டு தலம் உள்ளது இந்த வழிபாட்டு தலத்தில் சரியான பராமரிப்பு பணிகள் நடைபெறுவது இல்லை என்று கூறி சுதீர் சுரி தலைமையில் அவரது ஆதரவாளர்கள் நேற்று இந்து மத வழிபாட்டு தளம் முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் சுதீர் சுரிக்கு முன்னரே ரவுடி கும்பலால் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் அவருக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு இருந்தது . இந்த சமயத்தில் இவர் தர்ணா போராட்டத்தில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு இருந்த போது அங்கு இருந்த மர்ம நபர் ஒருவர் தொடர்ந்து 5 முறை சுட்டதில், அவரை நோக்கி 2 குண்டுகள்  பாய்ந்தது. இதில் படுகாயம் அடைந்த சுதீர் சுரியை மருத்துவமனையில் அனுமதித்த போது அவர் உயிரிழந்து விட்டார் என்பது தெரியவந்தது.

இந்த சம்பவம் போலிசார் காவலில் இருந்த போதே நடைபெற்றது மக்கள் அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது, இந்த நிலையில் போலிசார் சிவசேனா தலைவரை சுட்ட குற்றவாளியை கைது செய்து உள்ளனர். அவரிடம் விசாரணை நடத்திய போது.அவர் அந்த பகுதியில் துணிக்கடை வைத்து நடத்தி வரும் சந்தீப் சிங் என்பது தெரியவந்துள்ளது.

Exit mobile version