Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

வேற லெவல் கியூட்…டிரெடிஷனல் லுக்கில் ரசிகர்களின் மனம் பறித்த ஷிவானி நாராயணன்!!

வேற லெவல் கியூட்…டிரெடிஷனல் லுக்கில் ரசிகர்களின் மனம் பறித்த ஷிவானி நாராயணன்!!

தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியின் வாயிலாக அறிமுகமானவர் தான் ஷிவானி நாராயணன். இவர் 2015ஆம் ஆண்டில் விளம்பரங்களில் முதன் முதலாக நடித்து வந்தார். இதனை அடுத்து விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சியின் பகுதி மூன்றின் வாயிலாக தமிழ் சின்னத்திரையில் நடித்து ரசிகர்களால் கவனம் பெற்றார்.

இந்த தொடரில் ஷிவானி ‘காயத்ரி’ என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அத்துடன் சிவானி விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘பகல் நிலவு’ என்ற தொடரின் மூலமாக ஹீரோயினாக விஜய் டிவியில் நடித்தார். மேலும், ஜோடி அன்லிமிடெட் என்ற நடன நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றார். இதனையடுத்து ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ‘இரட்டை ரோஜா’ என்ற தொடரில் அபி என்னும் கதாபாத்திரத்தில் மீண்டும் தன்னுடைய சின்னத்திரை பயணத்தை தொடங்கினார்.

இருந்தபோதிலும் இவர், ‘இரட்டை ரோஜா’ தொடரின் பாதியில் இருந்து வெளியேறி விட்டார். அதன்பின் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் தமிழ் என்கிற நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று தனது திறமைகளை ரசிகர்களுக்கு காட்டினார் இந்த நிலையில் இதனை தொடர்ந்து பிக் பாஸ்4 சீசனில் கலந்து கொண்டு பல சர்ச்சைகளையும் சந்தித்தார்.

இதனையடுத்து பிக்பாஸ் வீட்டிற்குள் ஷிவானியின் தாய், ஷிவானியை திட்டியது தற்போது வரையிலும் மறக்க முடியாத ஒரு நிகழ்வாக இருக்கின்றது. ஷிவானி இந்த நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்த பின், தனது சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக அவ்வப்போது புகைப்படங்களையும், வீடியோக்களையும் வெளியிட்டு ரசிகர்களை உசுப்பேற்றி வந்தார்.

அத்துடன் தற்போது இன்ஸ்டாவில் ஷிவானி புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் மிகவும் தீயாக பரவி வருகிறது. புகைப்படத்தை கண்ட ரசிகர்கள் தங்களது பாராட்டு மழையினை பொழிகின்றனர்.

Exit mobile version