Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

வீடியோ:” எட்ல உண்டி மாமா ஒல்லு”! தெலுங்கு பாடலுக்கு குத்தாட்டம் போடும் ஷிவானி

 

இன்ஸ்டாகிராம் அழகியான ஷிவானி தெலுங்கு பட பாடல் ஒன்றிற்கு நடனமாடிய வீடியோ இணையதளங்களில் பரவி வருகிறது

 

 

விஜய் டிவியில் சீரியல் பிரபலங்களுள் ஒருவர் நடிகை ஷிவானி. விஜய் டிவியில் மூன்றுக்கு மேற்பட்ட சீரியல்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்று உள்ளார். அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பல்வேறு சூடுகளை கிளப்பும் வகையில் போஸ் கொடுத்து இளைஞர்களை கவர்ந்து வருகிறார்.

 

சிறுசிறு உடைகளை அணிந்து கொண்டு அவர் ஆடும் நடனமும் கொடுக்கின்ற போஸும் இளைஞர்களை சுண்டி இழுக்கிறது என்றே கூறலாம்.உலக அழகி இவர்தான் என்று இளைஞர்கள் தலையில் தூக்கி வைத்து கொண்டாடி வருகின்றனர்.

இளம் வயது ஆண் மகன்களின் கனவு கன்னியாக சிவானி வலம் வருகிறார் என்றே கூறலாம்.

 

விஜய் டிவியில் ஒளிபரப்பப்பட்ட பிக் பாஸ் சீசன் 4- இல் கலந்துகொண்டு பல்வேறு சர்ச்சைகளை சந்தித்தார். பாலாஜி முருகதாஸுடன் அவர் செய்த காதல் சேட்டைகள் ஏராளம். ஆனால் வெளியே இருவரும் கண்டு கொள்ளாதது போல் தான் இருக்கின்றார்கள். பிக்பாஸ் வீட்டிற்குள் ஷிவானியின் அம்மா வந்து ஷிவானியை திட்டியது யாராலும் மறக்க முடியாது. வெளியே வந்தபின் எப்பொழுதும் போல தனது சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் ஷிவானி அவ்வப்போது வீடியோக்களை வெளியிட்டு இளைஞர்களை உசுப்பேத்தி வருகிறார்.

 

இளைஞர்களின் கண்களுக்கு விருந்தளிக்கும் வகையில் உள்ளாடை மட்டும் போட்டுக்கொண்டு ஒரு போட்டோவை வெளியிடுவார். அதை பார்த்து ரசிகர்கள் ஒரு புறம் என்ன அழகு என்று பாராட்டுவார்கள். ஒருபுறம் இரட்டை அர்த்தத்தில் கலாய்த்து , எதற்கு அதை மட்டும் போடுறீங்க என ஒருபுறம் திட்டியும் வருவார்கள்.

 

மஞ்சள் மற்றும் கருப்பு நிற உடையில் போட்டுத்தாக்கு என்ற பாடலுக்கு உதட்டை கடித்து பின்னழகு காட்டி வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். பதிவிட்ட 4 மணி நேரங்களில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர். இதுவரை 3 மில்லியன் மக்கள் பார்த்து உள்ளனர்.

 

சமீபத்தில் ஜகமே தந்திரம் தனுஷ் படம் நெட்ஃப்லிக்சில் வெளியானது. அதில் வரும் ரகிட்ட ரகிட்ட பாடலுக்கு சின்ன டவுசர் போட்டு அவர் ஆடியுள்ளார். அதை அவரது ஸ்டோரியில் பதிவு செய்து இருந்தார். இந்த ஆட்டம் போதுமா! என்று கேட்கும் அளவிற்கு இருந்தது.

 

இப்பொழுது தாவணி பாவாடையில் தெலுங்கு பட பாடல் ஒன்றிற்கு நடனமாடியுள்ளார் சிவானி. அதை பார்த்த ரசிகர்கள் கியூட் ஸ்வீட் ஹார்ட் என்றெல்லாம் கமெண்ட்டுகளை அள்ளி குவித்து வருகிறார்கள்.

 

 

Exit mobile version