விஜய் தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து மக்களுக்கு அறிமுகம் ஆனவர்தான் நடிகை ஷிவானி நாராயணன். ஆனால் திடீரென்று யாரும் எதிர்பாராத நிலையில் ஜீ தமிழ் சீரியல்களில் அவர் நடிக்க ஆரம்பித்தார்.
பின்னர் மீண்டும் விஜய் டிவியின் பகல் நிலவு சீரியலின் மூலம் ஆரம்பித்த இடத்திற்கே திரும்பி வந்த ஷிவானிக்கு தனது நாலுமணி போட்டோ ஷூட் மூலம் பிக்பாஸில் அவர் நல்ல வாய்ப்பு கிடைத்தது.
பிக் பாஸ் வீட்டில் இருந்த போது எந்த பர்பாமன்ஸ் காட்டாத ஷிவானிக்கு ரசிகர்களே அட்வைஸ் செய்ய ஆரம்பித்தனர். இருப்பினும் உண்ணுவதும் உறங்குவதும் ஆகவே ஷிவானி இருந்து வந்தார்.
பின்னர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய ஷிவானிக்கு தற்போது கமல் திரைப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. சமூக வலைதளங்களில் மிகவும் சுறுசுறுப்பாக இயங்கி வரும் சிவானி அவ்வப்போது போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருவது வழக்கம்.
அந்த வகையில் தற்போது சிவானி விஜயதசமியை முன்னிட்டு வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்று ரசிகர்களின் மனதை கொள்ளையடித்து உள்ளது.