Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ஆக்சிஜன் இன்றி 15 பேர் உயிரிழந்த பரிதாபம்!

கோவா மாநிலத்தில் மருத்துவ கல்லூரி ஒன்றில் இன்று அதிகாலை சுமார் ஒரு மணி அளவில் மருத்துவமனை வளாகங்களில் திடீரென்று ஆக்சிஜன் அழுத்தம் குறைய தொடங்கியதாக தெரிகிறது. இதன் காரணமாக, மருத்துவர்கள் மற்றும் உறவினர்கள் பதற்றம் அடைந்தனர். உடனடியாக அங்கே அதிகாரிகள் பலரும் வந்து சேர்ந்தார்கள் ஆனால் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இருந்தாலும் அதற்குள் ஆக்சிஜன் அழுத்தத்தை திரும்ப கொண்டு வருவதற்கு சிறிது காலம் பிடித்தது. அந்த சமயத்தில் 15 நோயாளிகள் பலியாகி விட்டார்கள் என்று சொல்லப்படுகிறது.

காலை 2 மணி முதல் 6 மணி வரை ஆக்சிஜன் கொடுக்கும் அழுத்தம் குறைந்ததால் 15 பேர் பலியானதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்திருக்கிறது. ஏற்கனவே நாடு முழுவதும் ஆக்சிஜன் பற்றாக்குறை இருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுவருகிறது. அதோடு இந்தியாவின் நிலையைப் பார்த்த மற்ற நாடுகள் இந்தியாவிற்கு உதவிக்கரம்நீட்டிவருகிறார்கள்.அதன்படி சமீபத்தில் அமெரிக்கா ஆக்சிஜன் உள்ளிட்ட இதர மருத்துவ உபகரணங்களை இந்தியாவிற்கு அனுப்பி வைத்தது. அதோடு அமெரிக்காவைப் போன்ற மற்ற பல நாடுகளும் இந்தியாவிற்கு உதவி வருகின்றன.

ஆனாலும் இந்தியாவில் நிலைமை கட்டுக்குள் வரவில்லை இன்னும் சொல்லப்போனால் நாட்கள் செல்ல செல்ல நிலைமை மோசமாகிக் கொண்டு தான் போகிறது. அதற்கு காரணம் நோய்த்தொற்றின் வேகம் அதிகமாக இருப்பதாலும் மத்திய மாநில அரசுகள் போடும் கட்டுப்பாடுகளை பொதுமக்கள் பெரிய அளவில் மட்டும்தான் இதுபோன்ற அசம்பாவிதங்கள் நடப்பதோடு உயிரிழப்புகளும் அதிகரிக்கிறது என்று தெரிவிக்கிறார்கள்.

இந்த சூழ்நிலையில், இதற்கு முன்னரே இந்த மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை அன்று அதிகாலையில் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டால் அதன் விளைவாக 26 நோயாளிகள் பலியாகின என்று தெரிவிக்கப்படுகிறது. இதனை தொடர்ந்து கோவா மாநிலத்தில் இருக்கின்ற பம்பாய் உயர்நீதிமன்றம் ஆக்ஸிஜன் இன்றி இனி ஒரு உயிர்க்கூட போக கூடாது என தெரிவித்திருந்தது. இந்த சூழ்நிலையில், அதற்கு அடுத்த நாளே 15 பேர் ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழந்திருப்பது மாபெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருப்பதாக சொல்லப்படுகிறது.

Exit mobile version