Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

வேரோடு சாய்ந்த மரம்! உடல் நசுங்கி பலியான வங்கி மேலாளர்!

போரூர் மங்கலம் நகரைச் சார்ந்த வாணி கபிலன் என்பவர் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் மேலாளராக பணியாற்றி வருகிறார். அதோடு இவர் தமிழ் எழுத்தாளர் என்று சொல்லப்படுகிறது. பல்வேறு கவிதை தொகுப்பு புத்தகங்களையும் எழுதியிருக்கிறார்.

இந்த சூழ்நிலையில், அவர் பணி முடிந்து காரின் பின்பக்க சீட்டில் அமர்ந்துகொண்டு அவருடைய தங்கை எழிலரசி உடன் வீட்டிற்கு பயணம் செய்தார்.

அப்போது வாகனம் பிடி ராஜன் சாலை வழியே கர்நாடக வங்கி அருகே வந்து கொண்டிருந்தபோது திடீரென்று அங்கு இருந்த மரம் ஒன்று வேரோடு சாய்ந்து காரின் பின்பக்கம் விழுந்தது.

இந்த விபத்தில் காரின் பின்பக்கம் அமர்ந்திருந்த வங்கியின் மேலாளர் வாணி கபிலன் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவருடைய தங்கை எழிலரசி மற்றும் கார் ஓட்டுநர் கார்த்திக் உள்ளிட்டடோர் காயங்களுடன் உயிர் தப்பியிருக்கிறார்கள்

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு மற்றும் மீட்பு படையை சார்ந்தவர்கள் மரத்தை அப்புறப்படுத்தினர். இதுதொடர்பாக தகவலறிந்த கே.கே. நகர் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று உடல் நசுங்கி பலியான வாணி கபிலன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள்.

மேலும் காயமடைந்த எழிலரசி மற்றும் கார் ஓட்டுநர் கார்த்திக் உள்ளிட்டோர் கே.கே. நகர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருவதாக சொல்லப்படுகிறது.

Exit mobile version