சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்றவாறு இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. அந்த விதத்தில் நாள்தோறும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை இருந்து வருகிறது.
சென்னையில் நேற்றையதினம் பெட்ரோல் ஒரு லிட்டருக்கு 92 ரூபாய் 59 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு 85 ரூபாய் 98 காசுகளாகவும், விற்பனை செய்யப்பட்டு வந்தன. இந்த நிலையில், பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ச்சியாக இரண்டு தினங்களாக எந்த ஒரு மாற்றமும் இல்லாமல் இருந்த நிலையில், இன்றைய தினம் பெட்ரோல் ஒரு லிட்டர் 21 காசுகள் அதிகரித்து 93 ரூபாய் 11 காசுக்கும் ,டீசல் விலை லிட்டருக்கு 14 காசுகள் உயர்ந்து 86 ரூபாய் 45 காசுக்கும், விற்பனை செய்யப்படுகிறது.
இந்த விலை உயர்வானது இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த விலை உயர்வு காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்வதற்கான அபாயம் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.