Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

கொரோனா தொற்று! மருத்துவர்கள் அரசுக்குவிடுத்த முக்கிய கோரிக்கை!

கொரோனா நோய்தொற்று சமீப காலமாக மிக அதிகமாக பரவி வருகிறது. அதோடு இந்தியா கொரோனா பாதித்த நாடுகளின் பட்டியலில் முதலிடத்தில் இருந்து வருகிறது. இதனால் இந்திய மக்கள் பேரதிர்ச்சியில் ஆழ்ந்து இருக்கிறார்கள்.இந்த நிலையில், இந்தியாவில் மருத்துவமனை மற்றும் ஆக்சிசன், நோய் தடுப்பு மருந்துக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு இருக்கிறது. இது தொடர்பாக மத்திய அரசிடம் பல மாநில அரசுகள் வைத்த கோரிக்கைகளின் அடிப்படையில் அனைத்துக் கட்டுப்பாடுகளும் விரைவில் தீர்க்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி உறுதி அளித்து இருக்கிறார்.

இந்த நிலையில், இந்தத் தொடரின் இரண்டாவது அறையில் பலருக்கும் மூச்சுத் திணறல் உண்டாகிறது. இருந்தாலும் ஆக்சிசன் தட்டுப்பாடு நிலை நாடுமுழுவதும் உள்ளது இதற்கு இடையில் நோய்த்தொற்று பரவல் சற்று குறைந்ததை தொடர்ந்து மத்திய அரசு காட்டிய அலட்சியம் காரணமாகவே தற்சமயம் இந்த நிலைமை ஏற்பட்டு இருப்பதாக பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.அதே சமயத்தில் ஆக்சிசன் சிலிண்டர்களுக்கு நோயாளிகளின் உறவினர்கள் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது. இருந்தாலும் தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகளில் ஆக்சிசன் தட்டுப்பாடு இல்லை என்று சுகாதாரத் துறை தெரிவித்திருக்கிறது.

அதே சமயத்தில் புரசைவாக்கம் ஈவேரா ரோட்டில் இருக்கின்ற மருத்துவமனைகளில் நோய்த்தொற்று பாதித்தவர்கள் இந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு மருத்துவமனை நிர்வாகம் ஆட்சியை தெரிவிப்பதாகவும், கூடுதல் கட்டணம் செலுத்த தயாராக உள்ள நோயாளிகளை மட்டுமே சில மருத்துவமனைகள் அனுமதித்து கொள்வதாகவும், தகவல் கிடைத்து இருக்கின்றன.

இந்த நோயாளிகளின் உயிர் காக்கும் மருந்தாக விளங்கி வரும் ரெம்டிசிவிரை அடுத்து டோசிலி ஊசி மருத்துவமனைகளில் கூட இருப்பு தீர்ந்து விட்ட படியால் மருத்துவர்கள் கவலை அடைந்து இருக்கிறார்கள். மருந்து மற்றும் படுக்கை தட்டுப்பாட்டை நீக்குவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்திருக்கிறார்கள்.

Exit mobile version