Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

குடிமகன்களுக்கு வெளிவந்த ஷாக் நியூஸ்!! மதுபானங்களின் விலை திடீரென உயர்வு!! 

Shock news for citizens!! A sudden increase in the price of liquor!!

Shock news for citizens!! A sudden increase in the price of liquor!!

குடிமகன்களுக்கு வெளிவந்த ஷாக் நியூஸ்!! மதுபானங்களின் விலை திடீரென உயர்வு!! 

மதுபானம், பீர், ஒயின், விலையை உயர்த்தி டாஸ்மாக் நிறுவனம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட பாட்டிலுக்கு ரூ.10 அதிகமாக வாங்குவதாக ஏராளமான புகார்கள் மது பிரியர்களிடம் இருந்து வந்த வண்ணம் இருந்தன. இந்த சூழ்நிலையில் டாஸ்மாக் நிறுவனம் மாவட்ட மேலாளர்களுக்கு அனுப்பி உள்ள சுற்றறிக்கையில் பாட்டிலுக்கு நிர்ணயித்த விலையை விட அதிகமாக விற்பனை செய்வதாக புகார் வந்தால் ஊழியர்கள் தற்காலிக பணி நீக்கம் செய்யப்படுவர் என தெரிவித்திருந்தது. மேலும் அவர்கள் மீது புகார் வந்தது உண்மை என கண்டறியப்பட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை பாயும் என அதிரடி உத்தரவு பிறப்பித்தது.

இந்த சூழ்நிலையில் தமிழ்நாட்டில் மதுபானங்களின் விலை இன்று முதல் உயர்த்தப்படுவதாக டாஸ்மாக் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதேபோல் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மதுபானங்கள், ஒயின், பீர், ஆகியவற்றின் விலை உயர்த்தப்படுவதாக தெரிவித்துள்ளது. அதாவது ஒரு பாட்டிலுக்கு ரூ.10 முதல் முழு பாட்டிலுக்கு ரூ.320 வரை உயர்த்தப்பட்டுள்ளது.

மேலும் இந்த விலை உயர்வானது இன்று முதல் அமலுக்கு வர இருப்பதாக டாஸ்மாக் நிறுவனம் அறிவித்துள்ளது.

Exit mobile version