Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

அரசு ஊழியர்களுக்கு வெளிவந்த ஷாக் நியூஸ்! இவர்களுக்கு இனி இந்த தொகை கிடைக்க வாய்ப்பில்லை!

Shock news for government employees! There is no chance for them to get this amount anymore!

Shock news for government employees! There is no chance for them to get this amount anymore!

அரசு ஊழியர்களுக்கு வெளிவந்த ஷாக் நியூஸ்! இவர்களுக்கு இனி இந்த தொகை கிடைக்க வாய்ப்பில்லை!

மத்திய அரசு ஊழியர்கள் தங்களுக்கு புதிய அகவிலைப்படையை நிலுவைத் தொகையை வழங்க வேண்டும் என தொடர்ந்து அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். ஊழியர்களின் கணக்கில் நிலுவையில்  இருக்கும் தொகையை ஆகஸ்ட் மாதம் மத்திய அரசு வழங்கலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் 2021 ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரை பிடித்தம் செய்யப்பட்ட அகவிலைப்படையை மீண்டும் வழங்க வேண்டும் என்று மத்திய அரசு ஊழியர்கள் கோரிக்கை வைத்து வருகிறார்கள்.

இந்நிலையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு கொரோனா நேரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 18 மாத டிஏ அரியர் தொகை இனி வழங்கப்பட மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா பாதிப்பு ஏற்பட்ட போது 18 மாதங்களாக சம்பள உயர்வு போடவில்லை அதனை அரியர் தொகையாக திருப்பி தருவார்கள் என்று அரசு ஊழியர்கள் நம்பிக்கை வைத்து வந்தனர்.

அந்த பணத்தை எதிர்பார்க்க வேண்டாம் என்றும் அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இதனால் அரசு ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் கடந்த பிப்ரவரி மாதம் மத்திய அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருந்தது அந்த அறிவிப்பில் விலைவாசி உயர்வை ஈடு செய்யும் விதமாக மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி ஓராண்டுக்கு இரண்டு முறை உயர்த்தி வழங்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 4 சதவீத அகவிலைப்படி உயர்த்தப்பட்டு 38 சதவீதமாக வழங்கப்பட்டது. மேலும் கோடிக்கணக்கான பணியாளர்களும் ஓய்வூதியதாரர்களும் 38 சதவீத அகவிலைப்படியை பெறத் தொகுதி பெற்றனர்.

இந்நிலை மத்திய அரசு அடுத்த சில தினங்களில் அகவிலைப்படி மற்றும் அகவிலை  நிவாரணம் உயர்வு குறித்து அறிவிப்பை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. தற்போது மத்திய அரசு ஊழியர்களுக்கு மீண்டும் நான்கு சதவீதம் உயர்த்தி 42 சதவீதமாக வழங்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version