இல்லத்தரசிகளுக்கு வெளிவந்த ஷாக் நியூஸ்! 44 ஆயிரத்தை தாண்டி விற்பனையாக வாய்ப்பு தொடர்ந்து அதிகரிக்கும் தங்கம் விலை!
கடந்த கொரோனா காலகட்டத்தில் மக்கள் ஏதேனும் ஒரு பொருளின் மீது முதலீடு செய்ய வேண்டும் என எண்ணி தங்கத்தின் மீது முதலீடு செய்ய தொடங்கினார்கள். அதனால் தங்கத்தின் விலை தொடர்ந்து ஏறு முகத்தையே சந்தித்தது. அதனைத் தொடர்ந்து கடந்த 2022 ஆம் ஆண்டு கொரோனா பரவல் முற்றிலும் குறைந்த நிலையில் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டது.
மேலும் கடந்த பிப்ரவரி இரண்டாம் தேதி தங்கத்தின் விலை உச்சம் பெற்றது. அதனைத் தொடர்ந்து மீண்டும் தங்கத்தின் விலையானது ஏற்ற இறக்கமாகவே இருந்து வந்தது. இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. நேற்று கிராம் ரூ 5425 க்கு விற்பனையானது. மேலும் ஒரு பவுன் ரூம் 43,400 க்கும் விற்பனை செய்யப்பட்டது. ஆனால் இன்று கிராமுக்கு ரூ. 25 அதிகரித்து பவுனுக்கு ரூ 200 அதிகரித்துள்ளது.
இன்று ஒரு கிராம் தங்கம் 5450 க்கும், ஒரு பவுன் 43,600 க்கும் விற்பனை செய்யப்படுகின்றது. மேலும் இதுபோல தொடர்ந்து உயர்ந்தால் அடுத்த ஒரு இரு நாட்களில் தங்கம் பவுனுக்கு ரூ 44 ஆயிரத்து தாண்டி விடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
தங்கத்தைப் போலவே வெள்ளி விலையும் தொடர்ந்து ஏறு முகமாகவே உள்ளது ஒரு கிராம் ரூ 72.70 இல் இருந்து, ரூ 73.10 ஆகவும் ஒரு கிலோ பார் வெள்ளி 72,700 இல் இருந்து 73 ஆயிரத்து 100 ஆகவும் உயர்ந்து விற்பனையாகி வருகின்றது. இதனால் தற்போது நகை கடைகளில் கூட்டம் குறைந்துள்ளது என கூறப்பட்டுள்ளது.