வாகன ஓட்டிகளுக்கு வெளிவந்த ஷாக் நியூஸ்! ஒன்றாம் தேதி முதல் சுங்கச்சாவடிகளில் இத்தனை சதவீதம் கட்டணம் உயர்வா?

0
329
Shock news for motorists! Will tolls increase by this much percentage from 1st?

வாகன ஓட்டிகளுக்கு வெளிவந்த ஷாக் நியூஸ்! ஒன்றாம் தேதி முதல் சுங்கச்சாவடிகளில் இத்தனை சதவீதம் கட்டணம் உயர்வா?

இந்தியாவில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் வாகனங்களில் பயணம் செய்ய குறிப்பிட்ட கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு வசூல் செய்யப்படுகிறது. மேலும் இந்த கட்டடங்களை வசூல் செய்ய தேசிய நெடுஞ்சாலைகளில் ஆங்காங்கே சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் 800 க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகள் உள்ளது.

இதில் சுமார் 600 சுங்கச்சாவடிகளில் சுங்க கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. ஆண்டுக்கு ஒருமுறை இந்த சுங்கச்சாவடி கட்டணங்கள் மாற்றி அமைக்கப்படும். அந்த வகையில் நடப்பு நிதி ஆண்டில் நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளின் கட்டணத்தை 5 முதல் 10 சதவீதம்  உயர்த்த தேசிய நெடுஞ்சாலைகள் திட்டம் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. மேலும் வரும் ஏப்ரல் மாதம் ஒன்றாம் தேதி சுங்க கட்டணம் உயர்த்தப்படுகிறது.

தமிழகத்தில் உள்ள 55 சுங்கச்சாவடிகளில் உள்ள 29 சுங்கசாவடிகளில்  இந்த கட்டணம் உயர்வு அமலுக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டணம் உயர்வு மூலம் ஒரு காருக்கு ரூ 5 முதல் 15 ரூபாய் வரை கட்டண உயர வாய்ப்புள்ளது. சென்னையை பொறுத்தவரையில் புறநகர் பகுதியில் உள்ள பரனூர், வானகரம், சூரப்பட்டு, செங்குன்றம், பட்டறை, பெரம்பத்தூர் உள்ளிட்ட சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் சென்னையில் இருந்து ஆந்திரா, கர்நாடகா, மதுரை, கோவை போன்ற இடங்களுக்கு கார் போன்ற வாகனங்களில் பயணம் மேற்கொள்ளும் போது கூடுதல் செலவு ஏற்படலாம். மேலும் இந்த கட்டண உயர்வால் லாரி வாடகை மற்றும் அத்தியாவசிய பொருட்கள் விலை உயரம் அபாயம் ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் தனியார் பஸ்களின் கட்டணமும் உயரும் என்ற அச்சம் பொதுமக்கள் மத்தியில் நிலவி வருகின்றது.

இந்த கட்டணம் உயர்வு குறித்து தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் தலைமை அலுவலகத்தில் இருந்து தற்போது வரை எந்த ஒரு தகவலும் வரவில்லை. ஆனால் ஆண்டுதோறும் உயர்த்தப்படும் கட்டண உயர்வு குறித்து அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் எனவும் தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சுங்க சாடிகளில் 40 சதவீதம் கட்டணம் குறைக்கப்படும் 60 கிலோ மீட்டர் தூர இடைவெளியில் இருக்கும் சுங்கச்சாவடிகள் நகர் பகுதியில் இருக்கும் சுங்கச்சாவடிகள் அகற்றப்படும் என மத்திய சாலை போக்குவரத்து துறை மந்திரி நிதின் கட்கரி நாடாளுமன்றத்தில் அறிவித்தார். இதன் மீது எந்த ஒரு நடவடிக்கையும் தற்போது வரை எடுக்கப்படவில்லை.

தற்போது சுங்கச்சாவடிகள் அனைத்தும் பணம் வசூலிக்கு மையங்களாகவே செயல்பட்டு வருகின்றது. சாலைகளை சீரமைப்பது போன்ற பணிகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு என்பது வணிகர்கள் வாகன உரிமையாளர்களை மட்டுமல்லாமல் மக்களின் கடுமையாக பாதிக்கின்றது அதனால் சுங்கச்சாவடி கட்டணம் உயர்த்தப்பட்டால் மதுரவாயல் சுங்கச்சாவடியில் ஏப்ரல் 1 ஆம்  தேதி போராட்டம் நடத்துவோம் என தெரிவித்துள்ளனர்.