GOOGLE வெளியிட்ட ஷாக் நியூஸ்.. G PAY சர்வீஸ் JUNE 04 வரை மட்டுமே செயல்படும்!!
உலகில் பெரும்பாலான நாடுகளில் பண பரிவர்த்தனை டிஜிட்டல் முறைக்கு மாறிவிட்டது.வளர்ந்த நாடுகள்,வளர்ந்து வரும் நாடுகளில் ஆன்லைன் பண பரிவர்த்தனை அதிகளவு நடைபெறுகிறது.கூகுள் பே,போன் பே,பேட்டியம் உள்ளிட்ட செயலிகள் மூலம் பண பரிவர்த்தனை நடைபெற்று வரும் நிலையில் அடுத்த மாதம் ஜூன் 04 ஆம் தேதிக்கு பின்னர் கூகுளின் ஜிபே செயல்படாது என்று அந்நிறுவனம் அதிர்ச்சி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.
ஆனால் இந்தியா உள்ளிட்ட சில நாடுகளில் கூகுள் பே வழக்கம் போல் செயல்படும்.கூகுள் நிறுவனத்தின் இந்த முடிவு இந்திய பயனர்களை பாதிக்காது என்று சொல்லப்படுகிறது.இதனால் இந்திய வாடிக்கையாளர்கள் அச்சம் கொள்ள தேவையில்லை.
கூகுள் பே சர்வீஸ் அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகளில் தடை செய்யப்பட உள்ளது.இதனால் கூகுள் பே தடை செய்யப்பட உள்ள நாடுகளில் கூகிள் நிறுவனம் அதன் சர்வீஸை நிறுத்த முடிவு செய்துள்ளது.இதனால் கூகுள் பே மூலம் இனி பணம் அனுப்புதல்,பெறுதல் போன்றவை செய்ய முடியாது.ஆனால் கடந்த 2022 ஆம் ஆண்டு கூகுள் நிறுவனம் அறிமுகப்படுத்திய கூகுள் வாலட் அனைத்து நாடுகளிலும் செயல்படும்.
கூகுள் பே செயலியை விட கூகுள் வாலட் பயனர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் கூகுள் வாலட் பயனர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க கூகுள் நிறுவனம் இந்த முடிவை எடுத்துள்ளது என்று சொல்லப்படுகிறது.