கடும் அதிர்ச்சி! மீண்டும் உயரப் போகும் சிலிண்டர் விலை!

0
88

சென்ற வருடம் நடைபெற்ற தமிழக சட்டசபை பொதுத் தேர்தலில் திமுக ஆட்சிக்கு வந்தால் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 100 ரூபாய் குறைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனாலும் ஆட்சிக்கு வந்து 9 மாதங்கள் ஆன நிலையில் அது தொடர்பான எந்தவிதமான அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.

இந்த சூழ்நிலையில் சமையல் எரிவாயு விலை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது.இதனால் தமிழக மக்கள் அனைவரும் மிகுந்த அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள்.
சாதாரண மற்றும் சாமானிய மக்கள் இந்த எரிவாயு விலை உயர்வால் கடுமையான பாதிப்புக்கு ஆளாகியிருக்கிறார்கள்.

மத்திய அரசின் சார்பாக அவ்வப்போது சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ஏற்றப்பட்டு வருகிறது. இதற்கு தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் கடுமையான கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், கடந்த வருடம் அக்டோபர் முதல் வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டர் விலை உயர்த்தப்படவில்லை ஆனாலும் மனித பயன்பாட்டிற்காக சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டுள்ளது. சென்ற வருடம் அக்டோபர் முதல் பிப்ரவரி மாதம் வரையில் வணிக சிலிண்டர்களின் விலை 170 ரூபாய் அதிகரித்திருப்பதாக சொல்லப்படுகிறது.

19 கிலோ எடை கொண்ட ஒரு சிலிண்டர் இன்று முதல் சென்னையில் 2040 ரூபாய்க்கு பதிலாக 2145.5 விற்பனையாகும். டெல்லியில் 1907 பதிலாக 2012 க்கு விற்பனையாகும். கல்கத்தாவில் 1987 க்கு பதிலாக ரூபாய் 2095 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

அதேபோல மும்பையில் 1257லிருந்து ரூபாய் 1963 ஆக அதிகரித்திருக்கிறது. வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் எந்தவிதமான மாற்றமும் ஏற்படுத்தப்படவில்லை மார்ச்சு மாதம் 7ஆம் தேதிக்கு பிறகு வீட்டு உபயோக சிலிண்டர் விலையும் உயர்த்தப்படலாம் என்று தெரிவிக்கப்படுகிறது.