Rajasthan:ராஜஸ்தான் மாநிலத்தில் இறந்ததாக கருதி உடலை எரியூட்டும் போது உயிருடன் வந்த நபரால் அதிர்ச்சி.
ராஜஸ்தான் மாநிலம் ஜுன்ஜுனு மாவட்டத்தில் மா சேவா சன்ஸ்தான் என்ற ஆதரவற்றோர் பராமரிப்பு இல்லம் உள்ளது. அந்த இல்லத்தில் இருப்பவர்தான் மாற்றுத்திறனாளி ரோகித்தேஷ் . இவருக்கு உடல் நிலை சரியில்லாத காரணத்தால் சில நாட்களுக்கு முன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் மேலும் அவருக்கு உடல் நிலை மோசமான நிலை ஏற்பட்டு இருந்தது.
ரோகித்தேஷ் சுயநினைவை இழந்து மயக்க நிலையில் இருந்து உள்ளார். அவருக்கு தொடர்ந்து மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்பட்டு, அவரது உடல்நிலை மருத்துவர்கள் அளித்த சிகிச்சைக்கு என வித முன்னேற்றமும் இல்லாமல் மேலும் மோசமான நிலைக்கு சென்று இருக்கிறது. அவரது உடல் எந்த வித அசைவும் இல்லாமல் இருந்ததால், ரோகித்தேஷ் இறந்ததாக அன்றைய தினமே அறிவித்து இருக்கிறார்கள் மருத்துவர்கள்.
இவர் ஒரு ஆனதை என்பதால் இவரது உடலை வாங்க யாரும் வரவில்லை. அதனால் போஸ்ட்மார்ட்டம் செய்யாமல் ஆவணங்களை தயாரித்து இருக்கிறார்கள் மருத்துவர்கள். மேலும் ரோகித்தேஷ் உடல் நான்கு மணி நேரம் போஸ்ட் மார்ட்டம் ப்ரீசரில் வைக்கப்படுள்ளது. அதன் பிறகு போலீசாரிடம் அவரது உடல் ஒப்படைக்கப்பட்டது. போலீசார் அந்த உடலை எரியூட்ட மயானத்திற்கு ஆம்புலன்ஸ் மூலம் எடுத்து சென்று இருக்கிறார்கள்.
அப்போது ஏறி மேடையில் அந்த உடல் வைக்கப்பட்டு இருக்கிறது. தீயை பற்ற வைக்கும் போது அந்த உடலில் அசைவு தெரிந்து இருக்கிறது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த இருக்கிறார்கள் போலீசார். உடனே ரோகித் தேஷ் உடலை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்று மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு இருக்கிறது. இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரல் ஆகியது. இந்த நிலையில் மாவட்ட ஆட்சியர் ரோகித்தேஷ் இறந்ததாக மருத்துவ சான்று கொடுத்த மருத்துவர்களை பணி நீக்கம் செய்து இருக்கிறார்.