பதவியில் இருந்தால் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என நினைத்து பல தவறான செயல்களை செய்கின்றனர். ஆனால் சட்டம் என்பது அனைவருக்கும் சமம் என தெரிந்து கொள்ள வேண்டும். தவறு செய்தால் கண்டிப்பாக அவர்களுக்கு தண்டனை உண்டு என பலரும் கூறுவார்கள். அந்த வகையில் பதவியில் இருப்பவர்கள் சட்டமே தன் கையில் இருப்பது போல பல தவறுகளை செய்கின்றன. இதை தடுக்கும் வகையில் உச்ச நீதிமன்றம் ஒரு அதிரடி முடிவை எடுத்துள்ளது.
எம்.பி மற்றும் எம்.எல்.ஏ-க்கள் அவர்களின் வழக்குகளை விசாரிக்க அந்தந்த மாவட்டங்களில் சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட்டு உள்ளன. அப்போது அந்த சிறப்பு நீதி மன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளை விசாரிக்க சென்னை ஐகோர்ட் தானாக முன்வந்து செயல்பட்டது. அப்போது அந்த வழக்கில் தமிழகம் முழுவதும் உள்ள எம்.பி மற்றும் எம்.எல்.ஏ-க்கள் எதிரான வழக்குகளின் புள்ளி விவரங்களை வழங்க வேண்டும் எனவும் எம்.பி மற்றும் எம்.எல்.ஏ-க்கள் எதிரான கொலை, போக்சோ வழக்குகளுக்கு அடுத்தபடியாக ஊழல் பற்றி வழக்குகளை முன்னுரிமை அளித்து விசாரிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இது மட்டும் அல்லாமல் சிறப்பு நீதிமன்ற நீதிபதிகளின் பதவிக்காலம் குறித்த தகவல்களை தெரிவிக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டது. மேலும் பல ஆண்டுகளுக்கு முன் முடிக்கப்பட்ட வழக்குகளையும் மீண்டும் மறு ஆய்வு செய்து சமர்ப்பிக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. இதற்கான அடுத்த வழக்கு ஜனவரி 9 தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.