3 பாஜக வேட்பாளர்களின் வேட்புமனு நிராகரிப்பு! அதிர்ச்சியில் கட்சி தலைமை!

0
134
BJP

தமிழகம், புதுச்சேரி சட்டமன்ற தேர்தலைப் போலவே கேரளாவிலும் ஏப்ரல் 6-ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அங்கும் நேற்றுடன் வேட்புமனு தாக்கல் நிறைவடைந்த நிலையில், வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை இன்று நடைபெற்றது. இதில் வேட்பாளர்கள் இணைத்துள்ள ஆவணங்கள், அவருடைய சொத்து மற்றும் வழக்கு விபரங்கள் ஏதோனும் மறைக்கப்பட்டுள்ளதா? உள்ளிட்ட பல விஷயங்கள் ஆராயப்பட்டு வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும்.

கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான ஆட்சியில் பினராயிவிஜயன் முதலமைச்சராக பதவி வகித்து வருகிறார். இங்குள்ள 140 சட்டமன்ற தொகுதிகளுக்கும் தேர்தல் 2021 நடத்துவது குறித்த அறிவிப்பை கடந்த பிப்ரவரி 26ஆம் தேதி இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டது. அதன்படி கடந்த 12ம் தேதி தொடங்கிய வேட்புமனு தாக்கல், நேற்றுடன் நிறைவடைந்தது. இன்று வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்றது.

அதில் தலசேரி, குருவாயூர் மற்றும் தேவிகுளம் தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்த 3 பாஜக வேட்பாளர்களின் மனுக்கள் தேசிய தலைவரின் கையொப்பம் பெற்ற ஆவணங்கள் இல்லாததால் நிராகரிக்கப்பட்டது. இதனால் தலச்சேரியில் கண்ணூர் மாவட்ட பாஜக தலைவர் ஹரிதாஸ்,தேவிக்குளம் அதிமுக வேட்பாளர் தனலட்சுமி, குருவாயூர் வேட்பாளர் நிவேதிதா ஆகியோர் போட்டியிட முடியாது என்பதால் பாஜகவினர் கடும் அதிர்ச்சிஅடைந்துள்ளனர்.