Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

என் மேல் எச்சில் துப்பி அவமானப் படுத்தினார்… பிரபல நடிகை மீது பரபரப்பு புகாரைக் கூறிய நபர்!

என் மேல் எச்சில் துப்பி அவமானப் படுத்தினார்… பிரபல நடிகை மீது பரபரப்பு புகாரைக் கூறிய நபர்!

மலையாள திரைத்துறையில் ‘பாபின்ஸ்’ என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் பார்வதி நாயர். மேலும் இவர் தமிழ் சினிமாவில் தல அஜித் நடிப்பில் வெளியான ‘என்னை அறிந்தால்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் மக்களின் மத்தியில் பிரபலமானார்.

மேலும் இந்த படத்தை தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் மலையாள படங்களிலும் ஆர்வம் காட்டி வருகிறார் பார்வதி. ஆனாலும் அவரால் கதாநாயகியாக பெரிய அளவுக்கு வரமுடியவில்லை.

இந்நிலையில் கடந்த மாதம் இவர் வீட்டில் சில லட்சங்கள் மதிப்புள்ள பொருட்கள் மற்றும் நகைகள் திருடுப் போனதாக காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்த பொருட்களை தன் வீட்டில் வேலை செய்த சுபாஷ் சந்திர போஸ் என்பவர்தான் திருடிவிட்டு ஓடி விட்டதாக அவர் புகார் கூறி இருந்தார்.

இது சம்மந்தமாக வழக்குப் பதிவு விசாரணை நடந்துகொண்டு வரும் நிலையில், தற்போது சுபாஷ் சந்திர போஸ் பார்வதி நாயர் மீது ஒரு பரபரப்பை புகார் கொடுத்துள்ளார்.  அதில் “பார்வதி நாயர் வீட்டில் ஆண் நண்பர்களுடன் நடந்த மதுவிருந்துகள் பற்றி எனக்கு தெரிந்ததால், அதை நான் வெளியே சொல்லிவிடுவேன் என நினைத்து என்னை அடித்து துன்புறுத்தினார். மேலும் என் மீது எச்சில் துப்பியும் என்னை அவமானப்படுத்தினார். என் மீது அபாண்டமாக திருட்டு பட்டம் சுமத்துகிறார்” என்று கூறியுள்ளார்.

Exit mobile version