Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

சேலம் மாவட்டத்தில் அதிர்ச்சி சம்பவம்.. காம பூசாரியால் பறிபோன பெண்ணின் உயிர்!!

#image_title

சேலம் மாவட்டத்தில் அதிர்ச்சி சம்பவம்.. காம பூசாரியால் பறிபோன பெண்ணின் உயிர்!!

குழந்தை வரம் வேண்டி கோயிலுக்கு சென்ற பெண்ணை உல்லாசத்திற்கு அழைத்த காம பூசாரி. இச்சைக்கு இணங்க மறுத்த பெண்ணை சயனைடு கொடுத்து கொன்ற கொடூரம்.

சேலம் மாவட்டம், தாரமங்கலம் அடுத்த சேடப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பசவராஜ் (வயது 38).
இவர் பெங்களூர் நகரில் கல் உடைக்கும் வேலை செய்து வருகிறார். இவர் அதே பகுதியை சேர்ந்த செல்வி(வயது 28) என்பவரை கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பின் 2 முறை கர்ப்பம் அடைந்து குழந்தை பெற்ற செல்விக்கு இரு குழந்தைகளும் பிறந்த 1 வாரத்தில் திடீர் மரணம் அடைந்து விட்டது. இதன் பின் நீண்ட வருடங்களாக குழந்தை இல்லாமல் செல்வி கடும் மன உளைச்சலில் இருந்துள்ளார்.

குழந்தை பேறுக்கு முயற்சித்து வந்த செல்வி அதற்காக மருத்துவ சிகிச்சையும் எடுத்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 15 ஆம் தேதி அன்று வீட்டில் இருந்து புறப்பட்டு சென்ற செல்வி அதன் பின் வீடு திரும்ப வில்லை.

இதனால் அவரது கணவர் பசவராஜ் அவர்கள் பதறிப்போய் தாரமங்கலம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்து இருக்கிறார். இந்த புகாரின் அடிப்படையில் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்த காவல் துறையினருக்கு சிவதாபுரம், பெருமாம்பட்டி பகுதியில் உள்ள பெரியாண்டிச்சி அம்மன் கோயில் முட்புதரில் அடையாளம் தெரியாத பெண் சடலம் இருப்பதாக தகவல் கிடைத்து இருக்கிறது. இதனால் அங்கு விரைந்து சென்ற காவலர்கள் தீவிர விசாரணை மேற்கொண்டதில் அது காணாமல் போன செல்வி தான் என்பதை உறுதி செய்தனர்.

இதனை தொடர்ந்து செல்வியின் உடலை மீட்ட காவலர்கள் பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் செல்வி இறப்பு குறித்து விசாரணை மேற்கொண்ட காவலர்கள் சந்தேகத்தின் பேரில் பெருமாம்பட்டி பகுதியைச் சேர்ந்த குமார்(வயது 42) என்பவரை பிடித்து தங்கள் தோணியில் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் குமார் ஒரு கோயில் பூசாரி என்பதும், அவரது தோட்டத்தில் பெரியாண்டிச்சி சிலை வைத்து 25 ஆண்டுகளாக வழிபாடு நடித்தி வந்துள்ளார் என்பதும் தெரிய வந்துள்ளது.

இந்நிலையில் குழந்தை இல்லாத செல்வி குழந்தை வரம் வேண்டி தொடர்ந்து 10 நாட்களாக கோயிலுக்கு வந்திருக்கிறார். அப்பொழுது குழந்தை இல்லாதது குறித்து பூசாரியிடம் தனது வருத்தத்தை தெரிவித்து இருக்கிறார். இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள முயன்ற பூசாரி குமார் சம்பவத்தன்று ஒரு பூஜை செய்தால் குழந்தை பேறு உண்டாகும் என்று கூறி செல்வியை அழைத்திருக்கிறார்.

இதனால் செல்வியும் கோயிலுக்கு சென்ற நிலையில் யாரும் இல்லாத நேரம் பார்த்து செல்வியை உல்லாசத்திற்கு அழைத்துள்ளார் குமார். இதை சற்றும் எதிர்பாராத செல்வி மறுப்பு தெரிவித்ததோடு, அவரை கடுமையாக கண்டித்து இருக்கிறார்.

இந்த விவகாரத்தை செல்வி வெளியில் சொன்னால் எங்கே தன் மானம் போய்விடுமோ என்று அஞ்சி செலவியை கொல்ல பூசாரி குமார் முடிவெடுத்து இருக்கிறார். செல்வியிடம் மன்னிப்பு கேட்டு சமாதானம் படுத்த முயற்சிப்பது போல் நடித்து குளிர்பானத்தில் சயனைடு கலந்து கொடுத்துள்ளார் குமார்.

இதை அறியாத செல்வி அந்த குளிர்பானத்தை குடித்த சில நிமிடங்களில் துடிதுடித்து இறந்துள்ளார். செல்வி இறந்ததை உறுதி செய்த பூசாரி, அவர் அணிந்திருந்த தங்க நகைகளை எடுத்து கொண்டு எதுவும் தெரியாது போல் ஊருக்குள் நடமாடி வந்துள்ளார் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

மேலும் பூசாரி குமாருக்கு துணையாக அவரது கூட்டாளி மோகனும் இந்த சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார் என்பது தெரியவந்துள்ள நிலையில் இவர்கள் இதற்கு முன்னர் இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபட்டு இருக்கின்றார்களா? என்பது குறித்து காவல் துறை தீவிர விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில் குழந்தை வரம் வேண்டி கோயிலுக்கு சென்ற பெண்ணை கோயில் பூசாரி உல்லாசத்திற்கு அழைத்து கொடுரமாக கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Exit mobile version