Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

கல்லூரி மாணவர்களுக்கு வெளிவந்த அதிர்ச்சி தகவல்! இனி வார விடுமுறையே கிடையாது!

Shocking information for college students! No more weekends!

Shocking information for college students! No more weekends!

கல்லூரி மாணவர்களுக்கு வெளிவந்த அதிர்ச்சி தகவல்! இனி வார விடுமுறையே கிடையாது!

நடப்பு கல்வி ஆண்டில் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை சற்று காலதாமதம் ஆனது. இந்நிலையில் நடப்பு கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வந்தது. மாணவர் சேர்க்கையை முடித்த கல்லூரி வகுப்புகளை தொடங்க உயர்கல்வித்துறை உத்தரவிட்டது.அதனால் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் வரும் ஆகஸ்ட் மாதம் 17ஆம் தேதி தொடங்கியது.

இந்நிலையில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா தொற்று காரணமாக மாணவர்களுக்கு அதிக அளவு விடுமுறை வழங்கப்பட்டது. அதன் காரணமாக கற்றல் இழப்பு ஏற்பட்ட நிலையில் நேரடியாக உயர்கல்விக்கான வகுப்புகளை தொடங்க வேண்டாம். அதற்கு பதிலாக முதல் ஒரு வாரத்திற்கு அடிப்படை வகைகளை நடத்திவிட்டு அதன் பிறகு பாடங்களை நடத்த வேண்டும் என கல்லூரி பேராசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வகுப்புகள் காலதாமதமாக தொடங்கப்பட்ட காரணத்தினால் தான் பாடத்திட்டங்களின் நிறைவு செய்வதில் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டு வருகின்றது. அதனால் பாடத்திட்டத்தை சரியான நேரத்தில் முடிக்க சனிக்கிழமைகள் தோறும் வகுப்புகள் நடத்த வேண்டும் என கல்லூரி கல்வி இயக்கம் தெரிவித்துள்ளது.கடந்த தீபாவளி பண்டிகை, கிறிஸ்துமஸ் மற்றும் மாண்டஸ் புயல், தற்போது முடிந்த பொங்கல் பண்டிகை என அனைத்திற்கும் விடுமுறை அளிக்கப்பட்டதால் பாடத்திட்டங்கள் முழுமையாக முடிவு பெறாமல் இருக்கின்றது.

அதனால் தான் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என கூறப்படுகிறது. கல்லூரிகளில் அனைத்து பாடத்திட்டத்தையும் வருகிற மே மாத ஒன்றாம் தேதிக்குள் நிறைவு செய்திருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த முடிவு மாணவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version