TAMILNADU: தனியார் மற்றும் அரசு ஊழியர்களுக்கு வைப்பு தொகைக்கான வட்டி தொகை செலுத்தப்படவில்லை.
நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு அதிர்ச்சியை உண்டாகும் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. வருங்கால வைப்பு தொகைக்கு வழங்கப்படும் வட்டி இன்னும் வழங்கப்படவில்லை. இந்த வட்டி தொகையானது 8 மாதங்களாக வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளது தெரியவந்துள்ளது.
2023-2024 ம் நிதியாண்டிற்கான FY 24 சம்பளம் பெறும் தொழிலாளர்கள் தங்கள் வருங்கால வருங்கால வாய்ப்பு நிதி தொகைக்கான வட்டி தொகைக்கு காத்திருக்கின்றனர். இதனை தொடர்ந்து மதியசு தரப்பு விசாரணையில் முக்கிய தகவல்கள் வெளியாகின.
கடந்த பிப்ரவரியில் ஊழியர்களுக்கான வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதத்தை 8.15 சதவீதத்தில் இருந்து 8.25 சதவீதமாக உயர்த்தியது. ஆனால் இந்த நிதியாண்டின் குறிப்பிட்ட சில மாதங்களில் அவரவர் வங்கி கணக்கில் டெபாசிட் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இது தொடர்பான மத்திய அரசு விசாரணையில் இந்த செயல்முறை பைப்லைனில் உள்ளது விரைவில் வங்கி கணக்கில் செலுத்தப்படும் வட்டி இழப்பு ஏற்படாது என கூறியுள்ளது.
இடைப்பட்ட நாட்களில் பி எப் அட்வான்ஸ் வேண்டுமென்றால் அதை எளிதாக பெற்றுக்கொள்ளலாம். விண்ணப்பித்தவர்களுக்கு இனி மூன்று நாட்களில் அந்த தொகை கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கல்வி திருமணம் வீடு ஆகியவற்றிற்காக பி எப் தொகையிலிருந்து அட்வான்ஸ் பெற முடியும்.