வாகன ஓட்டிகளுக்கு வெளிவந்த அதிர்ச்சி தகவல்! ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் சுங்க கட்டணத்தில் திருத்தம்!
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் என்பது முக்கிய சுற்றுலா தளங்களில் ஒன்றாக உள்ளது கொடைக்கானலுக்கு மக்கள் அதிக அளவு வருகை தருவது வழக்கம்தான். மேலும் கொடைக்கானலுக்கு வரும் அனைத்து வாகனங்களுக்கும் நகராட்சி சார்பில் சுங்க கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. இந்நிலையில் நெடுஞ்சாலைத்துறை மற்றும் சிறுத்துறைமுகங்கள் துறையின் கீழ் செல்லும் வாகனங்களுக்கு சுங்க கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
மேலும் சுற்றுலா பேருந்துக்கு ரூ. 250, பேருந்துக்கு ரூ. 150, கனராக வாகனங்களுக்கு 100, வேன் மற்றும் மினி லாரி டிரக்குகளுக்கு ரூ 80, சுற்றுலா மற்றும் வாடகை சிற்றுந்திற்கு ரூ.40 ஆக சுங்க கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதனையடுத்து இரண்டு மற்றும் மூன்று சக்கர வாகனங்களுக்கு கட்டணம் வசூல் செய்வதில்லை. மேலும் கொடைக்கானல் தாலுகாவிற்கு உட்பட்ட அனைத்து வகையான வாகனங்களுக்கும் சுங்க கட்டணம் செலுத்துவதில் இருந்து நகராட்சி அனுமதி பெற்று விலக்கு அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் என்ஹெச்ஏஐ தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த தகவலில் நாடு முழுவதும் வரும் ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் சுங்க கட்டணத்தை உயர்த்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலை கட்டண விதிகள் 2008 ன் படி ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் ஒன்றாம் தேதி சுங்க கட்டணம் உயர்த்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில் கடந்த 2022 ஆம் ஆண்டு 10 முதல் 15 சதவீத வரை சுங்க கட்டணம் உயர்த்தப்பட்டது. மேலும் வாகன ஓட்டிகள் மத்தியில் பெருமகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் நடப்பாண்டில் 5 சதவீதம் முதல் 10 சதவீதம் வரை சுங்க கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.இந்த தகவல் வாகன ஓட்டிகளின் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.