Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பொதுமக்களுக்கு அதிர்ச்சி தகவல்!! தேர்தல் முடிவுகள் வரும் நேரத்தில் பால் விலை திடீர் உயர்வு!!

Shocking information for the public!! A sudden increase in the price of milk at the time of the election results!!

Shocking information for the public!! A sudden increase in the price of milk at the time of the election results!!

பொதுமக்களுக்கு அதிர்ச்சி தகவல்!! தேர்தல் முடிவுகள் வரும் நேரத்தில் பால் விலை திடீர் உயர்வு!!

தேர்தல் முடிவுகள் நாளை வரவுள்ள நிலையில் சுங்க கட்டணம் மற்றும் பால் விலையானது உயர்ந்துள்ளது.அந்த வகையில் கடந்த ஏப்ரல் மாதமே சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்துவதாக தெரிவித்திருந்த நிலையில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுவதையொட்டி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.தற்பொழுது நாடாளுமன்ற தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில் சுங்க கட்டணத்தை உயர்த்துவதாக தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தெரிவித்துள்ளது.

அதன்படி இன்று இரவு 12 மணி முதல் மாத கட்டணமாக 100 லிருந்து 400 வரையும் அதுவே ஒரு நாள் பயண கட்டணமாக ரூபாய் 5 லிருந்து ரூபாய் 20 வரைக்கும் வசூல் செய்யப்படுவதாக தெரிவித்துள்ளனர்.அதேபோல பாலின் விலையும் தற்பொழுது அதிகரித்துள்ளது.பாலின் தேவையானது ஒவ்வொரு மாநிலத்திலும் அதிகரித்து வரும் நிலையில் அதன் அண்டை மாநிலங்கள் அதனை பூர்த்தி செய்தும் வருகிறது.

அந்த வகையில் குஜராத் மாநிலத்தில் உற்பத்தியாகும் அமுல் நிறுவனமானது தமிழகத்தில் நுகர்வோர் மற்றும் மக்களுக்கு பயன்படும் வகையில் பால் விநியோகம் செய்கிறது.இதன் விலையானது கடந்த வருடம் உயர்த்தப்பட்ட நிலையில் தற்பொழுது மீண்டும் உயர்த்தி உள்ளது.அந்த வகையில் ஒரு லிட்டர் 54 ஆக இருந்த பால் விலையானது தற்பொழுது 56 ரூபாயாக உயர்ந்துள்ளது.இனி வரும் நாட்களில் லிட்டருக்கு இரண்டு ரூபாயும் அதே கோல்ட் பாலிற்கு இரண்டு ரூபாய் விலையும்  அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version