Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

திடுகிடும் அதிர்ச்சி தகவல் :! இன்னும் 20 வருடங்களில் இந்த பகுதிகள் எல்லாம் முற்றிலும் அழிந்துவிடுமாம் !!

கடந்த சில வருடமாக இயற்கையானது  தனது பருவநிலையை மாற்றி அமைந்து வருகின்றது .இதனால் பூமியின் சமநிலையை குறைந்து செயற்கையாக  தன்மைகளை மாற்றிக் கொண்டு வருகின்றது. இயற்கை அழிக்க தொழிற்சாலைகளில் வெளியேறும் கழிவுகளால் காற்றும், நீரும் மாசடைந்து வருகிறது.

உலகளவில் அதிகமாக நீரும் காற்றும் அமைந்துள்ள பூமியில் பருவநிலை மாற்றத்தினால் இயற்கை சீற்றம்  அதிகமாக ஏற்பட்டு வருவது வழக்கமான ஒன்றாக இருக்கிறது.

தொழிற்சாலைகளில் வெளியேறும் மீத்தேன்(methane) , co2 போன்ற கழிவுகளினால் ஓசோன் லேயர்(ozone layer) இயற்கை தன்மையை இழந்து வருக்கிறது .இதனால் பூமியில் இயற்கையான பருவநிலையில் சிறிது சிறிதாக மாற்றம் ஏற்பட்டுள்ளது.

இதனால் அதிக அளவில் உறைந்திருக்கும் பனிக்கட்டிகள்  நீராக மாருவாதனால் கடலின் நீரின் அளவு உயரும். இதனால் உலகில் உள்ள  சிறு சிறு தீவுகள் அழியும் அபாயம் ஏற்படும்.

அந்த வகையில் இந்தியாவில் அமைந்திருக்கும் அந்தமான் நிக்கோபார் மாலத்தீவுகள் இன்னும் 20 வருடங்களில் கடலில் மூழ்கும் என நெல்லை பல்கலைக்கழக துணைவேந்தர் பிச்சுமணி தெரிவித்துள்ளார்.


நெல்லை மாவட்டத்தில் ,நெல்லை மண்டல வங்கக்கடல் மற்றும் காலநிலை மாற்றம் குறித்த ஊடகவியலாளர்களுக்கான இருநாள் இணையவழி பயணி அரங்கம் நேற்று காலை துவங்கியது. இதற்கு மதுரை பல்கலைக் கழக மக்கள் தொடர்பியல் பேராசிரியர் நாகரத்தினம் வரவேற்றார்.

நெல்லை பல்கலைக்கழக துணைவேந்தர் பிச்சுமணி அவர்கள், பூமியில் ஏற்பட்டுள்ள இயற்கை பருவநிலை மாற்றத்தின் காரணமாக , கடல் நீரின் அளவு இன்னும் 20 வருடங்களில் 20 சென்டிமீட்டர் உயரம் என்றும் இதனால் அந்தமான் நிக்கோபார் மாலத்தீவு போன்ற பகுதிகள் முற்றிலும் அழியும் என்ற அவர் கூறியுள்ளார்.

Exit mobile version