இவர் பெண்ணே இல்லை ஆண் வெளியான அதிர்ச்சி தகவல்!! ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற இமான் கெலிஃப்!!

0
104
Shocking information released by a man, not a woman

olympics:  பாரிஸ் ஒலிம்பிக் மகளிர் குத்து சண்டை போட்டியில் கலந்து கொண்ட இமான் கெலிஃப் பெண் இல்லை ஆண் என்ற மருத்துவ அறிக்கை வெளியாகியுள்ளது.

2024 ல் பாரிசில் ஒலிம்பிக் தொடர் நடைபெற்றது. இந்த ஒலிம்பிக் போட்டியில் குத்துச்சண்டை போட்டியில் மகளிர் பிரிவில் அல்ஜீரிய வீராங்கனை இமான் கெலிஃப் தங்க பதக்கம் வென்றார். ஆனால் இமான் கெலிஃப்  ஒரு ஆண் என்பதற்கான மருத்துவ அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது. பிரெஞ்சு பத்திரிக்கையாளர் ஒருவர் இந்த அறிக்கையை கண்டறிந்துள்ளார்.

அந்த அறிக்கையில் இமான் கெலிஃப் க்கு ஒரு பெண்ணுக்கு உரிய உடல் அமைப்புகள் மற்றும் குனதிசியங்கள் இல்லாம ஒரு ஆணுக்குரிய உடல் அமைப்புகள் மற்றும் குணாதிசயங்களை கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது. மேலும் அவருக்கு கர்ப்பப்பை  இல்லை என்பதும் தெரியவந்துள்ளது. பொதுவாக ஆண்களுக்கு XY குரோமோசோம் இருக்கும் பெண்களுக்கு XX குரோமோசோம் இருக்கும் . ஆனால் இமான் கெலிஃப் க்கு XY குரோமோசோம் இருபது இந்த அறிக்கை மூலம் வெளிவந்துள்ளது.

மேலும் இமான் கெலிஃப் க்கு ஆண்களுக்கு மட்டும் வரக்கூடிய குறைபாடான 5 ஆல்பா ரிடக்டேஸ் இன்சஃ பீசியன்ஷி என்ற குறைபாடு இருப்பதாக அந்த அறிக்கையில் தெரியவந்துள்ளது.  இந்த குறைபாடு உள்ள ஆண்களுக்கு முகத்தில் தாடி மீசை இருக்காது. இதையடுத்து ஆண் என கூறப்பட்ட ஒருவரை மகளிர் குத்துச்சண்டையில் பங்கேற்க வைத்தது மிக பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது.

ஆனால் இமான் கெலிஃப் பெண் தான் என்று சர்வதேச ஒலிம்பிக் சங்கம் திட்டவட்டமாக கூறியிருந்தது. அவரை ஆதரித்து அறிக்கையும் வெளியிட்டது. தற்போது அவர் ஆண் தான் என்பதற்கான மருத்துவ அறிக்கை வெளியான நிலையில் அவரின் பதக்கம் திரும்ப பெற வேண்டும், ஒலிம்பிக் சங்கம் மற்றும் இமான் கெலிஃப் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் பலர் தெரிவித்து வருகின்றனர்