அதில் அவர் கூறியதாவது, என் மீது கொண்ட அன்பினால் உலக நாயகன் உட்பட பல பிரியம் ததும்பும் பட்டங்களால் எண்ணை அழைக்கிறீர்கள். மக்கள் கொடுத்து சக கலைஞர்களாலும் சரிகர்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட இப்படி பட்ட பாராட்டு சொற்களால் மகிழ்ந்துள்ளேன். உங்கள் இந்த அன்பால் நெகிழ்ந்து இருக்கிறேன். உங்கள் பிரியத்தின் மீது எனக்கு மாறாத நன்றியுணர்வும் உண்டு.
சினிமா களை எந்த ஒரு மனிதரையும் விட பெரியது. அந்த காலையில் மேலும் மேலும் கற்றுக்கொண்டு பரிமாணம் அடைய விரும்பும் ஒரு மாணவன்தான் நான் பிற கலைகளை போல சினிமாவும் அனைவருக்குமானது. அனைவராளுமானது, திறமையான கலைஞர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் நல்ல ரசிகர்கள் ஒன்றிணைந்து தான் சினிமா உருவாகிறது.
கலையை விட கலைஞன் பெரியவன் இல்லை என்பது என் ஆழமான நம்பிக்கை கற்றது கைம்மண் அளவு என்பதையும் உணர்ந்தவனாகவும், தொடர்ச்சியான முன்னகர்வில் நம்பிக்கை கொண்டு உழைத்துயர்பவனாகவும் இருப்பதே எனக்கு உவப்பானது.
அதனால் தான் நிறைய யோசனைக்கு பிறகு ஒரு முடிவுக்கு வர நேர்ந்தது. மேலே குறிப்பிட்டது போன்று பட்டங்களையும் அடைமொழிகளையும் வழங்கியவருக்கு எந்த மரியாதை குறைவும் வந்து விடாத வண்ணம் அவற்றை துறப்பது என்பதே அது.
எனவே என் மீது பிரியம் கொண்ட அனைவருக்கும் ஒரு வேண்டுகோள் வைக்கிறேன் இனி வரும் காலங்களில் என் ரசிகர்களும் ஊடக நண்பர்களும் திரைத்துறையை சார்ந்தவர்களும் மக்கள் நீதி மையம் கட்சித் தொண்டர்களும், சக இந்தியர்களும் எண்ணை கமல்ஹாசன் என்றோ KH என்றோ குறிப்பிட்டால் போதுமானது என்று கேட்டுக்கொள்கிறேன்.
இதனை காலமாக நீங்கள் என் மேல் காட்டி வரும் அன்புக்கு மீண்டும் ஒருமுறை நன்றி தெரிவிக்கிறேன். சக மனிதன் என்ற ஸ்தானத்திலும், சினிமாவை நேசிக்கிற நம் அனைவரிலும் ஒருவனாக நான் இருக்க வேண்டும் என்கிற எண்ணத்தில் இருந்தும் இந்த வேண்டுகோள் வெளிப்படுகிறது என்பதை புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன். அன்று அந்த அறிக்கையில் அவர் வெளியிட்டுள்ளார்.