டெங்குவால் இத்தனை உயிரிழப்புகளா? சுகாதரத்துறை அமைச்சர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!
கொரோனா தொற்று பாதிப்பே தற்பொழுது தான் குறைந்து காணப்படுகிறது.இரண்டாம் அழியில் தான் மக்கள் அதிகளவு உயிர்களை இழக்க நேரிட்டது.பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை அரசாங்கம் அமல்படுத்தியதால் இரண்டாம் அலையிலிருந்து மக்களால் கடந்து வர முடிந்தது.தமிழகம் அதிலிருந்து மீண்டு நடைமுறை வாழ்க்கையை வாழ ஆரம்பித்துள்ளனர்.தற்பொழுது மூன்றாவது அலை தீவீரமகும் என்று மருத்துவ வல்லுனர்கள் கூறினர்.ஆனால் மக்கள் அரசாங்கம் கோரிய வழிமுறைகளை சரியாக கடைபிடித்ததால் மூன்றாவது அலை அடுத்த வருடம் இறுதியில் தான் வரும் என்று தற்பொழுது கூறியுள்ளனர்.
அரசாங்கமும் தற்பொழுது தான் ஒன்றன் பின் ஒன்றாக அனைத்து துறைகளும் 100 சதவீதம் இயங்க அனுமதி அளித்து வருகின்றது.தொற்று பாதிப்பு குறைந்த இந்நிலையில் புதிய வகை கொரோனாவான ஏஒய் 4.2 என்ற ஒன்று உருவாகி வருதாக கூறியுள்ளனர்.இத்தொற்றால் அதிகளவு உயிர் சேதம் இருக்காது என்று தெரிவித்துள்ளனர்.அதுமட்டுமின்றி இது அதி வேகமாக பரவி வருகிறது என்றும் கூறியுள்ளனர்.இந்த புதிய வகை தொற்றை நினைத்து மக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம் என கேட்டுக்கொண்டனர்.இது ஓர் பக்கம் இருக்க தற்பொழுது டெங்கு அதிகளவு மக்களை தாக்கி வருகிறது.அதுகுறித்து மக்கள் நல்வாழ்வு மற்றும் சுகாதரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி ஒன்றை அளித்தார்.அப்போது அவர் கூறியது,இதுவரை தமிழகத்தில் மட்டும் டெங்குவால் 400 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதுமட்டுமின்றி டெங்கு பாதிக்கப்பட்டு இதுவரை தமிழகத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் கூறினார்.டெங்குவை தடுக்க அரசாங்கம் பல்வேறு திட்டங்களை நாளடைவில் செயல்படுத்தும் என்றும் தெரிவித்தார்.அதுமட்டுமின்றி வாரம் தோறும் நடக்கும் மெகா தடுப்பூசி முகாமை மக்கள் நன்கு பயன்படுத்திக்கொள்கின்றனர்.அதனால் இன்னும் ஓர் மாதத்திற்குள் நூறு சதவீதம் முதல் தவனை தடுப்பூசி செலுத்தி கொண்ட மாநிலங்களின் பட்டியலில் தமிழகமும் இடம்பெறும் என்று செய்தியாளர்கள் முன்னிலையில் தெரிவித்தார்.