Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

அதிர்ச்சி தகவல்!! விடுதலை 2 ரிலீஸ் ஆவதில் சிக்கல்!!

Shocking information!! There is a problem with the release of Vuthuthi 2!!

Shocking information!! There is a problem with the release of Vuthuthi 2!!

அதிர்ச்சி தகவல்!! விடுதலை 2 ரிலீஸ் ஆவதில் சிக்கல்!!

வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகிய விடுதலை பாகம் 1 திரைப்படம் இந்த ஆண்டு வெளியானது. இந்த படம் கடந்த மார்ச் மாதம் 31 ஆம் தேதியில் வெளிவந்து நல்ல வரவேற்பையும் அதிகபடியான வசூல் சாதனையும்  பெற்றது.  இந்த படத்தில் நடிகர் சூரி கதாநாயகனாகவும் , விஜய் சேதுபதி  படத்தின் பெருமாள் வாத்தியார் என்ற கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார்கள்.

இவர்கள் மட்டுமின்றி பவானி ஸ்ரீ , கெளதம் வாசுதேவ் மேனன் , ராஜீவ் மேனன் போன்ற இன்னும் பல சிறந்த நடிகர்கள் நடித்துள்ளனர். இந்நிலையில் வெற்றிமாறன்  விடுதலை 2  இயக்க திட்டமியிட்டு உள்ளார்கள். மேலும் பாகம் இரண்டு எப்போது வெளியாகும் என ரசிகர்கள் காத்திருந்த நிலையில் படப்பிடிப்பு தேதியில் மாற்றம் உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

தற்போது வந்த தகவலின்படி விடுதலை 2 படத்தின்  கதையில் சில மாற்றம் உள்ளத்தால் படம்  வெளியாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இப்போது படத்தில் சில திருத்தங்கள் செய்து இருப்பதால்  படப்பிடிப்பு இன்னும் 50 முதல்  60நாட்கள் ஆகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

இதனால் படத்தின் வேலை நாட்கள் நீண்டுகொண்டே செல்லும் என தெளிவாக தெரிகிறது. இந்த படம் இந்த ஆண்டு வெளியாவது சந்தேகம் தான் என்ற செய்தி ரசிகர்களிடையே பரவி வருகிறது. இந்த செய்தியால்  ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளார்கள்.

Exit mobile version