Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

புரூட் சாலட் சாப்பிடுபவர்களுக்கு அதிர்ச்சி நியூஸ்!! இந்த பழங்களை ஒரே நேரத்தில் சாப்பிடுவதால் இத்தனை ஆபத்தா?

உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்கும் பழங்களுக்கு ஆரோக்கிய பட்டியலில் தனி இடமுண்டு.பழங்களை சாப்பிடுவதால் நம் உடல் ஆரோக்கியம் நன்றாக மேம்படும்.உடலில் உள்ள பல கொடிய வியாதிகளை குணப்படுத்தும் மருந்தாக பழங்கள் திகழ்கிறது.

நாம் எடுத்துக் கொள்ளும் பழங்களில் வைட்டமின்கள்,கால்சியம்,பொட்டாசியம்,இரும்பு,நீர்ச்சத்து,நார்ச்சத்து என்று நம் உடலுக்கு தேவையான அனைத்துவித சத்துக்களும் நிறைந்துள்ளன.தினமும் ஏதேனும் ஒரு பழத்தை உட்கொள்ள வேண்டுமென்று மருத்துவர்கள் வலியுறுத்துகின்றனர்.

அதிக விலையில் விற்கப்படும் ஆப்பிள்,ஆரஞ்சு,டிராகன் புரூட்,கிவி போன்ற பழங்களை வாங்க முடியாதவர்கள் நம் ஊர் கொய்யா,சீத்தாப்பழம்,பப்பாளி,சப்போட்டா போனற்வற்றை எடுத்துக் கொள்ளலாம்.விலை அதிகம் நிறைந்த பழங்களைவிட விலை குறைந்த பழங்களில் தான் ஏகப்பட்ட சத்துக்கள் கொட்டி கிடக்கிறது.

பழங்களின் நம்மைகள்:

*உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தி வழங்குகிறது.நோய் பாதிப்பின் தன்மையை குறைக்கிறது.

*சருமப் பிரச்சனைகளை சரி செய்கிறது.முதுமை தோற்றத்தை தடுக்கிறது.

*உடலில் கொலஸ்ட்ரால் அளவை கட்டுக்குள் வைக்க உதவுகிறது.எலும்பின் வலிமையை அதிகரிக்க உதவுகிறது.

இப்படி பல நன்மைகள் கொண்ட பழங்களை நாம் தவறான முறையில் எடுத்துக் கொள்ளும் பொழுது அவை ஆபத்தாக மாறுகிறது.சிலர் கலவையான பழங்களை புரூட் சாலட் என்ற பெயரில் சாப்பிடுகின்றனர்.இப்படி எடுத்துக் கொள்ளும் பொழுது சில வகை பழங்கள் நம் உடலில் எதிர்வினை ஆற்றும்.இதனால் உடல் நலப் பிரச்சனைகளை நாம் சந்திக்க நேரிடும்.

எந்த பழத்தை எந்த பழத்துடன் சேர்த்து சாப்பிடக் கூடாது தெரியுமா?

1)பப்பாளி மற்றும் எலுமிச்சை

இந்த இரண்டு பழங்களும் அதிக ஊட்டச்சத்துக்கள் கொண்டவை ஆகும்.இருப்பினும் இவை இரண்டையும் ஒரே நேரத்தில் எடுத்துக் கொண்டால் செரிமானப் பிரச்சனை ஏற்பட்டுவிடும்.

2)வாழைப்பழம் மற்றும் கொய்யா

சிலர் புரூட் சாலட்டில் வாழைப்பழம் மற்றும் கொய்யா பழத்தை சேர்த்துக் கொள்வார்கள்.இது தவறான காம்பினேஷன் ஆகும்.இந்த இரண்டு பழங்களையும் ஒரே நேரத்தில் உட்கொண்டால் வயிற்று வலி,செரிமானப் பிரச்சனை,வயிறு உப்பசம்,வாயுத் தொல்லை போன்ற பாதிப்புகளை சந்திக்க நேரிடும்.

3)கேரட் மற்றும் ஆரஞ்சு பழம்

இவை இரண்டையும் ஒரே நேரத்தில் சாப்பிட்டால் செரிமானப் பிரச்சனை ஏற்பட வாய்ப்பிருக்கிறது.

4)அமில பழங்கள் மற்றும் இனிப்பு பழங்கள்

நாம் எடுத்துக் கொள்ளும் பழங்களில் சிலவற்றில் அமிலம் நிறைந்து காணப்படுகிறது.அதாவது எலுமிச்சை,ஆரஞ்சு,அன்னாசி போன்ற பழங்களில் அமிலம் நிறைந்திருக்கிறது.இந்த அமிலம் நிறைந்த பழங்களுடன் இனிப்பு சுவை நிறைந்த பழங்களை சேர்த்து உட்கொண்டால் செரிமானப் பிரச்சனை கடுமையாக பாதிக்கப்படும்.

5)நீர்ச்சத்து நிறைந்த பழங்கள் மற்றும் பிற பழங்கள்

தர்பூசணி,முலாம்பழம்,வெள்ளரிப்பழம் போன்றவை நீர்ச்சத்து நிறைந்த பழங்கள் ஆகும்.இந்த பழங்களுடன் பிற பழத்தை சேர்த்து உட்கொண்டால் வயிறு சம்மந்தபட்ட பாதிப்புகள் ஏற்படும்.

Exit mobile version