Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இல்லத்தரசிகளுக்கு அதிர்ச்சி செய்தி! கிடுகிடுவென உயர்ந்த தங்கம் மற்றும் வெள்ளி விலை!

Shocking news for housewives! Gold and silver prices skyrocket!

Shocking news for housewives! Gold and silver prices skyrocket!

இல்லத்தரசிகளுக்கு அதிர்ச்சி செய்தி! கிடுகிடுவென உயர்ந்த தங்கம் மற்றும் வெள்ளி விலை!

தங்கம்:

கடந்த செவ்வாய்கிழமை சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 184 குறைந்தது.ஒரு சவரன் ரூ 41,896 க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கம் ரூ 23 குறைந்து ரூ 5,237 க்கும் விற்பனையானது.ஆனால் நேற்று ஒரு சவரன் தங்கம் ரூ 42,368 க்கு விற்பனையானது.

இந்நிலையில் இன்று பவுனுக்கு 168 ரூபாய் அதிகரித்து ரூ 42,536 க்கு விற்கப்படுகிறது.மேலும் நேற்றைய நிலவரப்படி ஒரு கிராம் பவுன் ரூ 5296 க்கு விற்பனையானது.இன்று கிராமுக்கு 21 ரூபாய் அதிகரித்து ரூ 5317 க்கு விற்பனையாகி வருகின்றது.

வெள்ளி:

கடந்த செவ்வாய்கிழமை வெள்ளி ஒரு கிராம் ரூ 1.20 குறைந்து ரூ 31.20 ஆக விற்பனையானது. கட்டி வெள்ளி ஒரு கிலோவிற்கு ரூ 1200 குறைந்து ரூ 73,200 ஆக விற்பனையானது. இந்நிலையில் நேற்று ஒரு கிராம் வெள்ளி ரூ75 க்கு விற்பனையானது.மேலும் இன்று கிராமுக்கு 80 காசுகள் அதிகரித்து ரூ 75.80 க்கு விற்பனையாகின்றது.1கிலோ பார் வெள்ளி ரூ 75,800 க்கும் விற்பனை செய்யப்படுகின்றது.

Exit mobile version