வாகன ஓட்டிகளுக்கு அதிர்ச்சி நியூஸ்!! வாகனங்களுக்கான வாழ்நாள் வரியை உயர்த்தி தமிழக அரசு அதிரடி!!

0
139
#image_title

வாகன ஓட்டிகளுக்கு அதிர்ச்சி நியூஸ்!! வாகனங்களுக்கான வாழ்நாள் வரியை உயர்த்தி தமிழக அரசு அதிரடி!!

தமிழகத்தில் சொத்து வரி,சாலை வரியை தொடர்ந்து தற்பொழுது வாகனங்களுக்கான வாழ்நாள் வரியை உயர்த்தி தமிழக அரசு பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.மாநிலத்தின் நிதி வளத்தை உயர்த்தும் முனைப்பில் இருக்கும் திமுக அரசு இயக்கூர்திகள் வரி விதிப்பு சட்டத்தில் வரி விதிப்பு முறைகளில் திருத்தும் கொண்டு வந்துள்ளது.

அதன்படி சரக்கு வாகனங்கள்,சுற்றுலா வாகனங்கள்,ஆம்னி பேருந்துகள்,புது மற்றும் பழைய இருசக்கர வாகனங்கள்,கார்,ஆட்டோ உட்பட அனைத்து வித வாகனங்களுக்கும் புதிய வரியை அரசு நிர்ணயித்துள்ளது.

கடந்த 2012 ஆம் ஆண்டிற்கு பிறகு வாகனங்களுக்கான வரி உயர்வு ஏற்றப்படவில்லை.இதனால் வாகனங்களில் இருந்து கிடைக்க கூடிய வருமானம் குறைவாக இருப்பதால் வரி உயர்வு நடவடிக்கையை திமுக அரசு மேற்கொண்டு இருக்கிறது.ஏற்கனவே சொத்து வரி,சாலை வரியை உயர்த்திய நிலையில் தற்பொழுது வாகனத்திற்கான வரியும் உயர்த்தப்பட்டு இருப்பது அனைவரிடமும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

எந்த வாகனங்களுக்கு எவ்வளவு வரி உயர்த்தப்பட்டு இருக்கிறது?

1 லட்ச ரூபாய்க்கு உட்பட்ட இரு சக்கர வாகனங்களுக்கு 8 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாக வாழ்நாள் வரி உயர்த்தப்பட்டு இருக்கிறது.அதாவது வாகன வரி 8000 ரூபாய் இருந்து 10,000 ரூபாயாக உயர்ந்து இருக்கிறது.அதேபோல் 1 லட்ச ரூபாய்க்கு மேல் உள்ள இரு சக்கர வாகனங்களுக்கு 8 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக உயர்த்தப்பட்டு இருக்கிறது.அதாவது 8000 ரூபாயில் இருந்து 12000 ரூபாய்க்கு மேல் வரி செலுத்த வேண்டி இருக்கும்.

மேலும் ரூ.5 முதல் ரூ.10 லட்சத்திற்குள் இருக்கு இருசக்கர வாகனங்களுக்கு 8 சதவீதத்தில் இருந்து 13 சதவீதமாக வரி உயர்த்தப்பட்டு இருக்கிறது.அதேபோல் ரூ.10 முதல் ரூ.20 லட்ச ரூபாய்க்குள் இருக்கும் இருசக்கர வாகனங்களுக்கு 8 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக வரி உயர்ந்துள்ளது.ரூ.20 லட்சத்திற்கும் மேல் உள்ள இருசக்கர வாகனங்களுக்கு 8 சதவீதத்தில் இருந்து 20 சதவீதமாக வரி உயர்த்தப்பட்டு இருக்கிறது.

மேலும் ரூ.5 லட்சத்திற்கு கீழ் உள்ள கார்களுக்கு 10 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக வரி உயர்த்தப்பட்டு இருக்கிறது.ரூ.5 முதல் ரூ.10 லட்சத்திற்குள் இருக்கும் கார்களுக்கு 10 சதவீதத்தில் இருந்து 13 சதவீதமாக வரி உயர்த்தப்பட்டு இருக்கிறது.ரூ.10 முதல் ரூ.20 லட்ச ரூபாய்க்குள் இருக்கும் கார்களுக்கு15 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக வரி உயர்ந்துள்ளது..ரூ.20 லட்சத்திற்கும் மேல் உள்ள கார்களுக்கு 15 சதவீதத்தில் இருந்து 20 சதவீதமாக வரி உயர்த்தப்பட்டு இருக்கிறது.

அதேபோல் படுக்கை வசதியுடன் கூடிய ஆம்னி பேருந்துகளுக்கு ரூ.4000 வரை வரி உயர்த்தப்பட இருக்கிறது.புதிய இருசக்கர வாகனங்களுக்கு 12% வரை வாழ் நாள் வரி உயர போகிறது.இலகுரக வாகனங்களுக்கான சாலை பாதுகாப்பு வரி ரூ.2,250 ஆக உயர்கிறது.புதிய இருசக்கர வாகனங்களுக்கான சாலை பாதுகாப்பு வரி ரூ.375 மற்ற வாகனங்களுக்கு ரூ.3000 வரை உயர்ந்து இருக்கிறது.அதே சமயம் அரசின் கொள்கையின் படி பேட்டரி வாகனங்களுக்கு வரி கிடையாது என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.