மாணவர்களுக்கு வெளிவந்த அதிர்ச்சி செய்தி! மழையின் காரணமாக இனி பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை கிடையாது? 

0
248
Shocking news for students! No more school holidays due to rain?

மாணவர்களுக்கு வெளிவந்த அதிர்ச்சி செய்தி! மழையின் காரணமாக இனி பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை கிடையாது?

கடந்த வராங்களில் வங்கக்கடலில் தென்கிழக்கு பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலைகொண்டது.அதனையடுத்து அந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாறியது.அந்த புயலிற்கு மாண்டஸ் என்று பெயர் வைக்கப்பட்டது.மாண்டஸ் புயலின் காரணமாக தமிழகம் ,புதுச்சேரி,காரைக்கால் பகுதிகளில் கனமழை பெய்ததால் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டனர்.கடந்த தினங்களில் தான் மழை குறைந்த நிலையில் பள்ளிகள் அனைத்தும் மீண்டும் செயல்பட தொடங்கியது.

இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பில் தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இனி வடகிழக்கு பருவமழை விலகும் என அறிவித்துள்ளது.மழைக்காலம் வந்தாலே மாணவ,மாணவிகளுக்கு உற்சாகம்தான்.தற்போதுள்ள மாணவர்கள் அந்தந்த மாவட்ட ஆட்சியர்களையே தொடர்பு கொண்டு பள்ளிக்கு விடுமுறை அறிவிக்க வேண்டும் என ஆலோசனை கூறும் அளவிற்கு மாறிவிட்டது.

இவை அனைத்தும் இன்றுடன் நிறைவுக்கு வரும் என கூறப்படுகின்றது.நாளை வடகிழக்கு பருவமழை தமிழ்நாடு,புதுவை,காரைக்கால் மற்றும் அதனை ஒட்டிய கடலோர ஆந்திரம்,ராயலசீமா,தெற்கு உள் கர்நாடகம் மற்றும் கேரள பகுதிகளில் இருந்து விலகி செல்ல வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.இதன் காரணமாக இனி பள்ளிகளுக்கு மழையினால் விடுமுறை விடுவதற்கு வாய்புகள் குறைவு என கூறப்படுகின்றது.