புத்தாண்டில் ஜப்பான் மக்களுக்கு அதிர்ச்சி! பிரதமர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

0
283
#image_title
புத்தாண்டில் ஜப்பான் மக்களுக்கு அதிர்ச்சி! பிரதமர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
ஜப்பான் நாட்டில் நேற்று(ஜனவரி1) நிலநடுக்கம் மற்றும் சுனாமி அலைகள் ஏற்பட்டது. புத்தாண்டில் அதிர்ச்சிகரமான சம்பவம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா அவர்கள் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
ஜப்பான் நாட்டின் மேற்கு பகுதியில் 7.6 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து நாடு முழுவதும் 50 முறை சக்தி வாய்ந்த நில அதிர்வு ஏற்பட்டது.  மேலும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் 10 அடி வரை எழும் சுனாமி அலைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்பட்டு வருகின்றது. இந்நிலையில் ஜப்பான் நாட்டு பிரதமர் ஃபுமியோ கிஷிடா அவர்கள் மக்கள் பேரிடர்களுக்கு தயாராக இருக்க வேண்டும் என்று அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பாக ஜப்பான் நாட்டு பிரதமர் ஃபுமியோ கிஷிடா அவர்கள் “ஜப்பான் நாட்டில் தொடர்பு நிலநடுக்கம் ஏற்பட்டு வருகின்றது. இதனால் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மக்கள் பேரிடர்களுக்கு எப்பொழுதும் தயாராக இருக்க வேண்டும். கடலோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும். பேரிடர் துறையினர் மீட்பு துறையினர் அனைவரும் தயாராக இருக்க வேண்டும். மேலும் கல்லூரிகளுக்கு தேவையான. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
ஜப்பானில் நேற்று(ஜனவரி1) தொடர்பு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதை அடுத்து ஜப்பான் நாட்டு கடலோர நகரங்களான இஷிக்வா, நிகாடா, டொயாமா ஆகிய பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
அது மட்டுமில்லாமல் நிலநடுக்கத்தின் மையப்பகுதியில் இருந்து 300 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கடற்பகுதியில் மிகவும் மோசமான சுனாமி அலைகள் ஏற்படும் என்றும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மேலும் சில இடங்களில் சுனாமி அலைகள் தாக்கியிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.