Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பல்கலைக்கழக வளாகத்தில் துப்பாக்கி சூடு! பலர் உயிரிழந்ததாக தகவல்!

#image_title

பல்கலைக்கழக வளாகத்தில் துப்பாக்கி சூடு! பலர் உயிரிழந்ததாக தகவல்!

செக் குடியரசு நாட்டில் பல்கலைகழக வளாகம் ஒன்றில் மர்ம நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கி சூட்டில் பல பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது.

செக் குடியரசு என்று அழைக்கப்படும் செக்கஸ்லோவாகியா நாட்டில் மத்திய பரேகு நகர் உள்ளது. இந்த மத்திய பரேகு நகரில் ஜான் பலாச் சதுக்கத்தில் சார்லஸ் என்ற பல்கலைக்கழகம் இயங்கி வருகின்றது.

இந்த சார்லஸ் பல்கலைக்கழகத்தில் வழக்கம் போல வகுப்புகள் நடந்து கொண்டிருந்தது. அப்பொழுது திடீரென்று துப்பாக்கி சுடும் சத்தம் கேட்க வகுப்புகளில் இருந்து பலரும் அலறியடித்துக் கொண்டு வெளியே ஓடி வந்தனர்.

அப்பொழுது மர்மநபர் ஒருவர் சார்லஸ் பல்கலைக்கழகத்தின் வளாகத்தில் தூப்பாக்கியை வைத்து சரமாரியாக சுட்டார். இந்த சம்பவத்தில் பலர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் விசாரணை நடத்தினர்.

இந்த சம்பவத்தை துப்பாக்கியுடன் நுழைந்த மர்மநபர் தான் துப்பாக்கி சூடு நடத்தியிருப்பார் என்று செக் குடியரசு நாட்டின் காவல்துறையினர் எக்ஸ் பக்கம் வாயிலாக அறிவித்தனர். மேலும் எக்ஸ் பக்கம் வாயிலாக “துப்பாக்கி சூடு நடத்திய மர்ம நபரை தேடினோம். அப்பொழுது அந்த மர்மநபரை சுட்டு தான் பிடித்தோம்” என்று தெரிவித்தனர். இந்த துப்பாக்கி சூட்டில் பலர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version