Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

கடை உரிமையாளர்களே அலர்ட்!! கட்டாயம் குப்பைத்தொட்டி.. இல்லையென்றால் 1 லட்சம் அபராதம்!

Shop owners alert!! Compulsory garbage can.. Otherwise 1 lakh fine!

Shop owners alert!! Compulsory garbage can.. Otherwise 1 lakh fine!

கடை உரிமையாளர்களே அலர்ட்!! கட்டாயம் குப்பைத்தொட்டி.. இல்லையென்றால் 1 லட்சம் அபராதம்!

தமிழ்நாட்டின் அனைத்து கடை மற்றும் வீடுகளை சார்ந்தவர்கள் மற்றும் மக்கும் குப்பை மக்காத குப்பை என்று தனித்தனியாக பிரித்துக் கொடுக்க வேண்டும் என்று மாநகராட்சி மற்றும் நகராட்சி பல நிபந்தனைகள் போடப்பட்டது.

ஆனால் இவ்வாறு குப்பைகளை பிரித்து கொடுக்கப்படுவது ஒரு சில இடங்களில் மட்டுமே பின்பற்றப்பட்டு வரும் பட்சத்தில் சென்னை மாநகராட்சி தற்பொழுது எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.

அதில், சென்னை மாநகராட்சியில் கிட்டத்தட்ட 5200 மெட்ரிக் டன் அளவில் திடக்கழிவுகள் நாள்தோறும் சேகரிக்கப்படும் நிலையில், இதனின் மக்கும் குப்பையை தனியாக பிரித்து மறுசுழற்சிக்கும், பிளாஸ்டிக் போன்ற கழிவுகளை சிமெண்ட் ஆலைகளுக்கும் எரிபொருளாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில் சென்னையில் உள்ள கடைகள் அனைத்தும் மக்கும் குப்பை மக்காத குப்பை என்று இரு குப்பை தொட்டிகளை வைக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்த நிலையில் கடை வைத்திருப்பவர்கள் பலர் இதனை பின்பற்றுவதில்லை.

அதுமட்டுமின்றி இவ்வாறு அனைத்து கடைகளிலும் இரண்டு வகைகளாக பிரிக்கும் குப்பை தொட்டிகள் வைப்பது குறித்து மாநகராட்சி அலுவலர்களுக்கும் அறிவுரையும்  கூறப்பட்ட நிலையில் இனி வரும் நாட்களில் இரண்டு குப்பை தொட்டிகள் இல்லாத கடைகளுக்கு ஒரு  1 லட்சத்து 18ஆயிரத்து 800 ரூபாய் அபராதம் வசூலிக்கப்படும் என்று கூறியுள்ளனர். இந்த அபராதத்தை தவிர்க்கும் வகையில் சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் உள்ள கடை உரிமையாளர்கள் கட்டாயம் இரு குப்பை தொட்டிகளை வைக்க வேண்டும்.

Exit mobile version