போக்குவரத்துக்கு இடையூறு உள்ள கடைகள் அகற்றம்!! போலிஸாரின் அதிரடி நடவடிக்கை!!
தேனி மாவட்டத்திலுள்ள கம்பம் சாலையில் கொட்டக்குடி ஆற்றுப்பாலம் அருகில் சாலையோர போக்குவரத்து பாதிப்பு உள்ளது. கடந்த 3 வருடங்களாக பெட்டிக்கடைகளும், தள்ளுவண்டியும், எவ்வித பயன்பாடும்மின்றி போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அப்பகுதியை சேர்ந்த மது பிரியார்கள் அதனை திறந்த வெளி மதுபான பாரக மாற்றி பயன்படுத்தி வந்தனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளுடன் வியாபாரிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தேனி மாவட்டத்தில் பழைய மீன் மார்க்கெட் பகுதியில் இருந்து தெற்கு போலீஸ் நிலையம் வரை இடங்களை ஆக்கிரமித்து தள்ளுவண்டிகளில் பழக்கடைகள் உள்ளிட்ட பல கடைகளை வைத்து வியாபாரம் செய்து வந்தனர். மேலும் திறந்தவெளி கழிப்பிடமாகவும் அப்பகுதி தற்பொழுது மாறியுள்ளது. இதனால் சுகாதார சீர்கேடும் ஏற்பட்டது.
அதுமட்டுமில்லாமல் மது அருந்துபவர்கள் மது குடித்துவிட்டு அங்கு நிறுத்தப்படும் இருசக்கர வாகனங்களை சேதப்படுத்துவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். அங்கு போக்குவரத்திற்கு இடையூராக நிறுத்தப்பட்ட வாகனங்களில் உள்ள டயர்களில் காற்றை வெளியேற்றினர். ஆக்கிரமிப்புகள் அகற்றியதற்கு வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது அவர்கள், பழைய மீன் மார்க்கெட் வளாகத்தில் பழங்கள் விற்பனை ஆவதில்லை. இதனால் நஷ்டம் ஏற்படுகிறது.
இந்நிலையில் எந்த பயன்பாடுமின்றி போக்குவரத்திற்கு பொதுமக்களுக்கும் இடையூராக இருந்த இந்த தள்ளு வண்டிகள் மற்றும் பெட்டி கடைகளை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நடந்தது. இந்த பணியை போலீஸ் சூப்பிரண்டு பார்த்திபன் பார்வையிட்டு உள்ளார்.