உடலில் இருக்கின்ற முக்கிய உள்ளுறுப்பு இதயம்.மனிதர்கள் உயிர்வாழ இதயத் துடிப்பு அவசியமான ஒன்றாகும்.ஆனால் இன்றைய காலகட்டத்தில் பலர் இதயம் தொடர்பான பாதிப்புகளை சந்தித்து வருகின்றனர்.குழந்தைகள்,பெரியவர்கள் மத்தியில் அதிகரித்து வரும் நோயாக இதய அடைப்பு உள்ளது.சிலருக்கு பிறக்கும் பொழுதே இதய அடைப்பு ஏற்படுகிறது.இது இதயத்தின் செயல்பாட்டை சீர்குலைத்து உடலில் இருக்கின்ற மற்ற உறுப்புகளை பாதிக்கச் செய்கிறது.இதய துடிப்பு பாதிக்கப்படும் நிலையைத் தான் இதய அடைப்பு என்கிறோம்.
இதயத்தில் ஏற்படும் மற்றொரு பாதிப்பு இதய ஓட்டை.இது பெரும்பாலும் பிறவிலேயே தோன்றக் கூடிய நோயாகும்.
இதயத்தில் ஓட்டை இருப்பதற்கான அறிகுறிகள்:-
1)மூச்சு திணறல்
2)உடல் சோர்வு
3)இதயம் படபடப்பு
4)கால் வீக்கம்
5)கால் பாதம் படபடப்பு
இதய அடைப்பை இயற்கை வைத்தியம் மூலம் குணமாக்குவது எப்படி?
தேவையான பொருட்கள்:-
1.செம்பருத்தி இதழ்
2.தேன்
3.இஞ்சி
4.எலுமிச்சை சாறு
செய்முறை:-
ஒரு செம்பருத்தி பூ எடுத்துக் கொள்ளவும்.அடுத்து ஒரு துண்டு இஞ்சியை தோல் நீக்கி சுத்தம் செய்து கொள்ளவும்.அதன் பிறகு பாதி எலுமிச்சை சாற்றை ஒரு கிண்ணத்தில் பிழிந்து வைத்துக் கொள்ளவும்.
அடுத்து ஒரு பாத்திரம் எடுத்து செம்பருத்தி பூவின் இதழை சேர்க்கவும்.அதன் பின்னர் தோல் நீக்கிய இஞ்சியை தட்டி சேர்க்கவும்.பிறகு பிழிந்து வைத்துள்ள எலுமிச்சை சாறை சேர்த்து நன்கு கலந்து விடவும்.
அதன் பின்னர் ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி கைகளால் பிசையவும்.இந்த சாற்றை ஒரு கிண்ணத்திற்கு வடிகட்டி சிறிதளவு தேன் சேர்த்து குடித்தால் இதய அடைப்பு பிரச்சனை சரியாகும்.