Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

வீக்கம் ஒரே நாளில் குறைய வேண்டுமா? இதோ அதற்கான சூப்பர் டிப்ஸ்!

#image_title

வீக்கம் ஒரே நாளில் குறைய வேண்டுமா? இதோ அதற்கான சூப்பர் டிப்ஸ்!

நம் உடலில் எந்த பகுதிகளில் திரவம் தேங்கினாலும் அவை வீக்கமாக காணப்படும். மேலும் அந்த வீக்கம் தானாகவே மறைந்து விடும். அவ்வாறு மறையாமல் நீண்ட நாட்கள் வீக்கம் இருந்தால் மருத்துவரை சென்று பார்ப்பது மிக அவசியம்.

பாதம் மற்றும் கணுக்காலில் காயம் ஆகிய காரணங்களால் வீக்கம் ஏற்படுகின்றது. பொதுவாக கர்ப்பிணி பெண்களுக்கு காலில் வீக்கம் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை சென்று பார்ப்பது நன்மை. இந்த வீக்கத்துடன் நெஞ்சு, வலி, மூச்சு திணறல் போன்றவைகளும் ஏற்பட வாய்ப்புள்ளது. அந்த வீக்கத்தை சரி செய்ய என்ன செய்வது என்று இந்த பதிவின் மூலம் காணலாம்.

திரவம் தேங்குவதினால் தான் வீக்கம் ஏற்படுகின்றது. வீக்கம் உள்ளவர்கள் தண்ணீர் குடிப்பதின் மூலமாக வீக்கம் உடனடியாக குறைய தொடங்கும். தினந்தோறும் 8 முதல் 10 டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும். உடலுக்கு தேவையான அளவு தண்ணீர் குடிக்கவில்லை என்றால் திரவம் தேங்கி வீக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது.

மேலும் நாம் அமர்ந்திருக்கும் பொழுது கால்களை உயர்த்தி வைத்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு செய்யும்பொழுது கால்களில் மீது எந்த சுமயும் வைக்க கூடாது.அதன் பிறகு வெதுவெதுப்பான நீரில் ஒரு டீஸ்பூன் கல் உப்பு சேர்த்து காலை ஊற வைத்தால் வீக்கம் மற்றும் வலிகள் குறைய தொடங்கும்.

உயர் ரத்த அழுத்தம் மற்றும் திரவம் தேங்க காரணம் பொட்டாசியம் குறைபாடு. அதற்கு சர்க்கரைவள்ளி கிழங்கு, வாழைப்பழம், கோழிக்கறி ஆகிய உணவுகளை நாம் அதிக அளவில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

உடலில் உள்ள கழிவுகள் மற்றும் மிகுதியான திரவங்களை நீக்க எலுமிச்சை ஜூஸ் குடித்து வந்தால் உடலில் எந்த இடத்தில் வீக்கம் ஏற்பட்டாலும் அவை உடனடியாக மறைந்து விடும்.

Exit mobile version