Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

கொடுத்த பணம் 3 வாரத்தில் திரும்ப கைக்கு வர வேண்டுமா..? எளிய பரிகாரம்..!!

#image_title

கொடுத்த பணம் 3 வாரத்தில் திரும்ப கைக்கு வர வேண்டுமா..? எளிய பரிகாரம்..!!

கொடுத்த பணம் திரும்ப கைக்கு வர வேண்டும் என்று நினைப்பவர்கள் கல் உப்பு, வெந்தயம், கருப்பு எள் மூன்றையும் நன்றாக மிக்ஸி ஜாரில் அரைத்து பொடி செய்து அதை தூய்மையான வெள்ளைத் துணியில் கட்டி அதை கன்னி மூலை எனப்படும் தென்மேற்கு மூலையில் வைத்து விட வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் கொடுத்த பணம் 3 வாரத்தில் திரும்ப கிடைக்கும்.

அதேபோல் வாராக் கடனை நம்மிடம் மீண்டும் வரச் செய்யும் ஆற்றல் கொண்ட தெய்வமாக பைரவ மூர்த்தி இருக்கிறார். ஞாயிற்றுக் கிழமை ராகு காலத்தில் மாலை 4.30 மணியிலிருந்து 6 மணிக்குள்ளாக சிவன் கோயிலில் இருக்கும் பைரவர் சந்நிதிக்குச் சென்று, சிறிதளவு தூய்மையான வெள்ளைத் துணியில் 27 கருப்பு மிளகினை போட்டு முடிந்து, ஒரு மண் அகல் விளக்கில் அந்த முடிச்சை திரியாக வைத்துக் நல்லெண்ணெய் ஊற்றி, தீபம் ஏற்றவும். பிறகு அந்த தீபத்தை சுற்றி குங்குமத்தை போட வேண்டும். இந்த வழிபாட்டை மூன்று வாரங்களுக்கு செய்து வர நீங்கள் பிறருக்கு கடனாக கொடுத்த பணம் மீண்டும் உங்களிடம் வந்து சேரும்.

Exit mobile version