நமது உடலில் சிறுகுடல் பகுதியில் அல்சர் புண்கள் தோன்றுகிறது.உரிய நேரத்தில் உணவு உட்கொள்ளாமல் தவிர்த்தல்,காலை உணவை தவிர்த்தல் போன்றவற்றால் அல்சர் புண்கள் ஏற்படுகிறது.
அல்சர் புண் வந்தால் வயிறு வலி,வயிறு எரிச்சல்,புளித்த ஏப்பம்,மலத்தை வெளியேற்றும் போது ஆசனவாயில் எரிச்சல் மற்றும் கருப்பு நிறத்தில் மலம் வெளியேறுதல்,நெஞ்செரிச்சல் போன்ற பாதிப்புகள் ஏற்படும்.
வயிற்றில் அல்சர் இருந்தால் வாய் ஓரத்தில் புண்கள் வரத் தொடங்கும்.அல்சர் இருப்பவர்கள் காரம் நிறைந்த உணவுகளை தவிர்க்க வேண்டும்.அதேபோல் அதிக எண்ணெய் உணவுகள் மற்றும் சூடான உணவுகளை தவிர்க்க வேண்டும்.
அல்சர் புண்களை இயற்கையான வழியில் குணமாக்குவது குறித்து இங்கு விளக்கப்பட்டுள்ளது.இதை பின்பற்றினால் வெறும் 14 நாட்களில் அல்சர் பாதிப்பில் இருந்து முழுமையாக மீண்டுவிடலாம்.
தேவையான பொருட்கள்:
1)வாழைப்பழம் – ஒன்று
2)தேங்காய் துண்டு – ஒரு கப்
3)கசகசா – அரை தேக்கரண்டி
4)பனங்கற்கண்டு – சிறிதளவு
5)பசும் பால் – கால் டம்ளர்
செய்முறை விளக்கம்:
*முதலில் ஒரு வாழைப்பழத்தை தோல் நீக்கிவிட்டு அதன் சதை பற்றை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ள வேண்டும்.
*அடுத்து ஒரு மூடி தேங்காயை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.இதை மிக்சர் ஜாரில் போட்டு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மைய்ய அரைத்துக் கொள்ள வேண்டும்.
*இந்த தேங்காய் விழுதில் இருந்து பால் பிரித்தெடுத்துக் கொள்ளுங்கள்.அடுத்து அடுப்பில் பாத்திரம் வைத்து கால் தேக்கரண்டி நெய் சேர்த்து சூடுபடுத்துங்கள்.
*பிறகு அதில் அரை தேக்கரண்டி கசகசா சேர்த்து பொரியவிட வேண்டும்.அடுத்து அரைத்து வைத்துள்ள தேங்காய் பாலை அதில் ஊற்ற வேண்டும்.
*பிறகு கால் டம்ளர் பசும் பால் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.பால் கொதித்துக் தருணத்தில் நறுக்கி வைத்துள்ள வாழைப்பழத் துண்டுகளை அதில் போட்டு இரண்டு நிமிடங்களுக்கு காய்ச்ச வேண்டும்.
*அடுத்து தங்களுக்கு தேவையான அளவு பனங்கற்கண்டை அதில் போட்டு கலந்து ஒரு கிளாஸிற்கு ஊற்றி இளஞ்சூடு பதம் வந்ததும் பருக வேண்டும்.
*இந்த பாலை தொடர்ந்து பருகி வந்தால் அல்சர்,வயிற்றுப்புண்,வாய்ப்புண் போன்ற பாதிப்புகள் குணமாகும்.