Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பிறர் தரும் அன்னதானத்தை வாங்கலாமா..?? அது பாவத்தை சேர்க்குமா..??

பிறர் தங்களுடைய பாவத்தை போக்குவதற்காக தான் அன்னதானம் செய்கிறார்கள், அந்த அன்னதானத்தை நாம் பெற்றுக் கொண்டால் அவர்களுடைய பாவம் நம்மை வந்து சேருமா என்ற கேள்வி பலருக்கும் உள்ளது அதற்கான விளக்கத்தை தான் தற்போது காணப் போகிறோம்.
தானங்களிலேயே மிகச்சிறந்தது அன்னதானம்.

தானம் என்ற ஒன்றை எப்படி பண்ண முடியும் ஒருத்தவங்க வாங்கினா தானே பண்ண முடியும், யாருமே அந்த தானத்தை வாங்கவில்லை என்றால் அன்னதானம் என்ற ஒன்றை செய்ய முடியாது.

நமது பெரியோர்கள் அன்னதானம் பண்ணினா பாவம் போகும் அப்படின்னு, அதை வாங்கி இருக்கிறார்கள், அதை எல்லோரும் பயன்படுத்தியும் இருக்கிறார்கள் என்பது நமக்கு தெரிகிறது. ஒரு மனிதன் தனது வாழ்க்கையில் செய்த பல்வேறு வகையான பாவங்களை தொலைப்பதற்கு அவனுக்கு கிடைத்திருக்கிற ஒரே தானம் என்னவென்றால் அன்னதானம் தான்.

இவ்வாறு மனிதர்களுக்கு மட்டும் தான் அன்னதானம் செய்ய வேண்டும் என்று அவசியம் இல்லை. ஒரு நல்ல நாள் என்றால், யாரேனும் ஒருவருக்கு சாப்பாடு வாங்கி கொடுக்கலாம், நாய்களுக்கு பிஸ்கட் வாங்கி தரலாம், பூனைகளுக்கு பால் வாங்கி கொடுக்கலாம், எறும்புகளுக்கு அரிசி இதுபோன்ற உணவுகளை அளிக்கலாம். இதுவும் ஒரு வகையான அன்னதானம் தான்.

அன்னதானம் செய்கிறவர்கள் அவர்களது பாவத்தை போக்கிக் கொள்வதற்காக அன்னதானம் வழங்குகிறார்கள் என்பது உண்மைதான். ஆனால் அவர்கள் கொடுக்கக் கூடிய தானத்தை நமது கைகளை நீட்டி வாங்கிக் கொள்வதால் அவர்களுடைய பாவம் நம்மை வந்து சேரும் என்றால் அது தவறு.

ஏனென்றால் நமது கைகளை நீட்டி அந்த தானத்தை வாங்குவதால் நமது கர்ம வினைகள் குறையும் என்பதுதான் உண்மை.புரட்டாசி மாதங்களில் கூட கடவுளுக்காக உணவு செய்வதற்கு என, வீடு வீடாக சென்று கைகளை ஏந்தி அரிசியினை வாங்கி வந்து உணவு செய்வார்கள்.

அது மட்டுமின்றி சிறிய வயது குழந்தைகள் முதலே கோவில்களில் கொடுக்கக்கூடிய அன்னதானத்தை கைகளை நீட்டி தானம் வாங்க பழகிக் கொடுக்க வேண்டும். ஏனென்றால் நமது கைகளை நீட்டி தானம் வாங்குவதால் நமது கர்ம வினைகள் நீங்கும் என்று கூறப்படுகிறது.

ஆனால் செல்வங்கள் அதிகமாக இருந்தால் அந்த மனிதர்களிடம் கர்வம் என்பது அதிகரித்து விடுகிறது. அத்தகையவர்கள் நாம் எதற்காக தானத்தை வாங்க வேண்டும் என்ற கர்வத்தால் கைகளை நீட்டி தானம் வாங்க மாட்டார்கள். ஆனால் அவர்கள் தனது கைகளை நீட்டி ஒருவரிடம் தானம் பெறும் பொழுது, அவர்களிடம் உள்ள கர்வம், ஆணவம் ஆகிய அனைத்தும் நீங்கிவிடும் என்றும் கூறப்படுகிறது.

எனவே தானம் கொடுப்பது எவ்வளவு சிறந்ததோ அதே போன்று தான், மற்றவர்கள் கொடுக்கும் தானத்தை வாங்குவதும் நமக்கு புண்ணியத்தை தேடி தரும்.

Exit mobile version