Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இனி Google-லில் தேடினால் உங்கள் பெயர், முகவரி, புகைப்படம் வரும்! எப்படி என்று தெரியுமா?

நம்மில் பலருக்கும் ஆசை இருக்கும் நமது பெயரை கூகுளில் தேடினால் வர வேண்டுமென்று. நடிகர் நடிகை என பிரபலங்கள் பெயரை தேடினால் தடாரென்று வந்து நிற்கும்.

ஆனால் இனி உங்கள் பெயரை தேடினால் கூகுளில் வரும். இதற்காக கூகுளில் people Cards என்ற அம்சத்தை வெளியிட்டுள்ளது. இரண்டு வருடமாக சோதனை செய்யப்பட்டு வந்த நிலையில் இப்பொழுது அமலுக்கு வந்து உள்ளது.

இதை மொபைல் வைத்திருப்பவர்கள் மட்டும் செய்ய முடியும். இதற்கு உங்கள் ஜிமெயில் கணக்கு மற்றும் மொபைல் எண்ணும் வேண்டும். இதை பயன்படுத்தி நீங்கள் உங்களுக்கென்ன people card உருவாக்கலாம்.
எப்படி பதிவு செய்வது:
1. உங்களுக்கு சொந்தமாக Google People Card துவங்க mobile எண் மூலம் உள்நுழைய வேண்டும்.
2. அங்கு Add Me to Search என்ற ஆப்ஷனை இருக்கும்
3. அதில் Add Yourself to Google Search என்பதை தேர்வு செய்ய வேண்டும்.
4. இப்பொழுது உங்கள் மொபைல் நம்பரை பதிவு செய்து OTP வரும். அதை அதில் என்டர் செய்து பதிவு செய்யவும்.
5. பிறகு ஒரு படிவம் வரும் அதில் அனைத்து தகவல்களையும் அதில் பதிவு செய்ய வேண்டும். என்ன படிப்பு? என்ன வேலை? Facebook கணக்கு, instagram கணக்கு போன்ற சமூக வலைதள பக்கத்தை போன்ற குறிப்புகள் பதிவு செய்ய வேண்டும்.

இப்பொழுது Google search இல் உங்கள் பெயரை தேடினால் முதலில் வந்து நிற்கும். நீங்கள் கணக்கு வைத்திருக்கும் சமூக வலைதளங்களின் தகவலும் காட்டும்.
உதாரணமாக நீங்கள் peolpleCard பதிவு செய்துவிட்டீர்கள் என்றால், உங்கள் பெயரை Googleலில் தேடினால், Google முதல் பக்கத்திலேயே நீங்கள் வருவீர்கள். அதில் உங்கள் Photo, Email Address, Mobile Number, உங்களது Facebook, Twitter, instagram போன்ற சமூகவலைதள தகவல்களும் இருக்கும். இப்பொழுது ஆங்கிலத்தில் மட்டுமே கூகுள் பிபுள் கார்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாகவும் கூடிய விரைவில் மற்ற மொழிகளில் வர உள்ளதாக கூறப்படுகிறது.

Exit mobile version