பணத் தட்டுப்பாட்டை சந்திக்க கூடாதா? அப்போ இந்த ஒரு பொருளை தூபத்தில் சேர்த்துக் கொள்ளுங்கள்!!

0
128

உங்கள் வீட்டில் கண் திருஷ்டி,பில்லி,சூனியம்,எதிர்மறை ஆற்றல் இருந்தால் பணக் கஷ்டம்,உடல் நலக் கோளாறு,துன்பம் தரும் விஷயங்கள் அதிகளவில் நடக்கும்.இதுபோன்ற பாதிப்புகள் அண்டாமல் இருக்க நம் முன்னோர்கள் வெள்ளி மற்றும் செவ்வாய் ஆகிய இரண்டு தினங்களில் வீடு முழுவதும் சாம்பிராணி தூபம் போடுவதை வழக்கமாக கொண்டிருந்தனர்.

ஆனால் தற்பொழுது இந்த வழக்கம் நம் மக்களிடத்தில் மறைந்து வருகிறது.இதனால் கண் திருஷ்டி,எதிர்மறை ஆற்றலால் கடுமையான பணக் கஷ்டம்,தேவையில்லாத செலவு,உடல் நலக் கோளாறு,குடும்ப உறுப்பினர்கள் இடையே ஒற்றுமையின்மை போன்றவை ஏற்படுகிறது.

இதுபோன்ற அபாயத்தில் இருந்து மீள இனி வெள்ளிக்கிழமை மற்றும் செவ்வாய் கிழமை நாளில் சாம்பிராணி தூபம் போட்டு பூஜை அறையில் தீபம் ஏற்றி வழிபடுங்கள்.சிலர் கரிசலாங்கண்ணி,வெட்டி வேர்,மருதாணி இலை,வேப்பிலை மற்றும் மேலும் சில சக்தி வாய்ந்த பொருட்களை கொண்டு இயற்கையான முறையில் சாம்பிராணி பொடி தயாரித்து தூபம் போடுவார்கள்.

தொடர்ந்து சாம்பிராணி தூபம் போட்டு வந்தால் வீட்டில் உள்ள கண்திருஷ்டி அகலும்.தொழில் ரீதியான பிரச்சனைகள் அகல மூலிகை சாம்பிராணி கொண்டு தூபம் போடலாம்.வீட்டில் தெய்வ சக்தி அதிகரிக்க தூதுவளை இலையை உலர்த்தி சாம்பிராணி தூபம் போடலாம்.

வில்வ இலையை கொண்டு சாம்பிராணி தூபம் போட்டால் வீட்டில் நேர்மறை ஆற்றல் பெருகும்.சகல தோஷங்களும் விலகிப் போக அருகம்புல்லை காயவைத்து பொடித்து தூபம் போடலாம்.

நோய் நொடியின்றி வாழ சாம்பிராணியில் வேப்பிலை சேர்த்து தூபம் போடலாம்.வீட்டில் நிம்மதி நிலைக்க கரிசலாங்கண்ணி இலையை பொடித்து தூபம் போடலாம்.செல்வ செழிப்புடன் வாழ மருதாணி விதையை காயவைத்து சாம்பிராணி தூபத்தில் போடலாம்.வீட்டில் உள்ள துர்திஷ்டம் நீங்க மருதாணி இலையை கொண்டு சாம்பிராணி தூபம் போடலாம்.வெட்டி வேர் கொண்டு சாம்பிராணி தூபம் போட்டால் வீட்டில் அதிக நன்மைகள் நடக்கும்.