Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

அவரை நான் கோலி, ரோஹித் ஷர்மாவோடு ஒப்பிடுவேன்… ஹர்பஜன் சிங் பாராட்டும் இளம் வீரர்!

அவரை நான் கோலி, ரோஹித் ஷர்மாவோடு ஒப்பிடுவேன்… ஹர்பஜன் சிங் பாராட்டும் இளம் வீரர்!

இந்திய அணியின் இளம் வீரரான சுப்மன் கில் பற்றி முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் பேசியுள்ளார்.

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான மூன்றாவது போட்டியில் இந்திய அணியின் இளம் வீரர் சுப்மன் கில் சிறப்பாக விளையாடி தனது முதல் ஒருநாள் போட்டி சதத்தை அடித்தார். இதன் மூலம் அவர் ஆட்டநாயகனாகவும், தொடர் நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டார்.

இந்நிலையில் அவரைப் பற்றி இந்திய அணியின் முன்னாள் பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங் புகழ்ந்து பேசியுள்ளார். அதில் “அவர் முதன்முதலில் பஞ்சாப் அணிக்காக விளையாடியபோது. அவர் ஷார்ட் பால்களை விளையாடுவதில் சிறந்து விளங்குகிறார், இந்த அம்சம் நீங்கள் சர்வதேச அளவில் விளையாடும் திறமையானவர் என்பதைக் குறிக்கிறது. ஸ்கொயர் லெக்கை விட மிட்-ஆன் மற்றும் மிட்-விக்கெட் நோக்கி பந்தை இழுப்பதன் மூலம் தனக்கு எவ்வளவு நேரம் இருக்கிறது என்பதைக் காட்டுகிறார்

அவர் ஒரு சிறப்பான பேட்ஸ்மேன், அவர் ஒரு சிறப்பான முறை மற்றும் சிறந்த ஷாட் தேர்வுகளைக் கொண்ட பேட்ஸ்மேன். பேட்ஸ்மேன்ஷிப்பின் தரமான அளவுகோகளில், தற்போதைய இந்திய கிரிக்கெட்டர்களில் ரோஹித் ஷர்மா, விராட் கோலி மற்றும் கே.எல். ராகுல் போன்றோருடன் நான் அவரை ஒப்பிடலாம். ” எனக் கூறியுள்ளார். விரைவில் கில் இந்திய அணியில் இடம்பிடித்து தொடக்க ஆட்டக்காரராக களமிறக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Exit mobile version