Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

வன்னியர் போராட்டத்தை சாக்காக வைத்து கருணாநிதி பிச்சை எடுத்துக் கொண்டார்! ஷியாம் கிருஷ்ணசாமி விளாசல்..!!

வன்னியர் போராட்டத்தை சாக்காக வைத்து கருணாநிதி பிச்சை எடுத்துக் கொண்டார்! ஷியாம் கிருஷ்ணசாமி விளாசல்..!!

திமுகவின் மூத்த அரசியல்வாதி ஆர்.எஸ்.பாரதியின் விமர்சன பேச்சுக்கு புதிய தமிழகம் கட்சியை சேர்ந்த ஷியாம் கிருஷ்ணசாமி பதிலடி கொடுத்துள்ளார்.

ஆதி திராவிடர்கள் நீதிபதி பதவிகளில் அமர்ந்திருப்பதற்கு, திமுக போட்ட பிச்சைதான் காரணம் என்று வாய்க்கு வந்தபடி பத்திரிகை மற்றும் ஊடகங்களையும் தரக்குறைவாக விமர்சித்தார். புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமியின் மகன் ஷியாம் கிருஷ்ணசாமி தனது டுவிட்டர் பக்கத்தில் திமுகவின் அநாகரிக பேச்சுக்கு சாட்டையடி பதில் கொடுத்துள்ளார்.

அவரது டுவிட்டரில் பதிவு செய்திருப்பதாவது;
இட ஒதுக்கீட்டு உரிமைக்காக போராடிய வன்னியர்களின் போராட்டத்தை சாக்காக வைத்து கலைஞர் கருணாநிதி தனது சொந்த சாதிக்கு MBC ஒதுக்கீட்டில் பிச்சை எடுத்துக்கொண்டார். ஆர்.எஸ்.பாரதி போன்றவர்கள் ஒருபோதும் BC மற்றும் MBC போன்ற ஒதுக்கீடுகளுக்கு பிச்சை போட்டதாக பேசிவதில்லை என்றும் கூறியுள்ளார்.

மேலும், திராவிட முன்னேற்ற கழகம் தன்னை வள்ளல்போல காட்டிக் கொள்ள ஒடுக்கப்பட்ட சமூக மக்களை பயன்படுத்திக் கொள்கிறது. வன்னியர் போராட்டத்தின் மூலம் கருணாநிதி தன் சொந்த சாதிக்கு MBC ல் பிச்சை எடுத்துக் கொண்டதையும், உங்கள் முதலியார் சாதி ஏழைகளுக்கு மோடி 10% EWS இட ஒதுக்கீடு பிச்சையை பற்றியும் பேசலாமே என்று வெளுத்து வாங்கியுள்ளார்.

திராவிடம் ஒருபோதும், முஸ்லிம்களுக்கு 3% இட ஒதுக்கீடு பிச்சை போட்டோம் என்று பேசுவதில்லை. பிற சமூகங்களுக்கு பிச்சை போட்டோம் என்று சொல்வதில்லை. தன்னை பெரிய வள்ளலாக காட்டிக் கொள்ள தாழ்த்தப்பட்ட சமூகத்தை பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்று ஷியாம் கிருஷ்ணசாமி பதிவு செய்துள்ளார்.
ஷியாம் கிருஷ்ணசாமியின் டுவிட்டர் பதிவு தற்போது இணையத்தில் மிக வேகமாக திமுகவிற்கு எதிராக பரவி வருகிறது. தனது சமூகத்தின் 7 பிரிவுகளை ஒன்றாக்கி தேவேந்திரகுல வேளாளராக மாற்றி அரசாணை பிறப்பிக்க புதிய தமிழகம் கட்சி தொடர்ந்தி போராடி வருவது குறிப்பிடத்தக்கது.

வன்னியர்களின் இட ஒதுக்கீடு போராட்டம் பாமகவின் ராமதாஸ் தலைமையில் நடைபெற்றதும், 21 உயிர்களை இழந்தும், பல்வேறு இன்னல்களுக்கு பிறகும் MBC இட ஒதுக்கீடு உரிமை கிடைத்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Exit mobile version