கடந்த சில நாட்களுக்கு முன்பு தூத்துக்குடியில் உள்ள சாத்தான்குளம் காவல் நிலையத்தில், வியாபாரிகள் இருவர் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் உயிரிழப்பு காரணமாக கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சிறப்பு காவல் ஆய்வாளர் பால் துரைக்கு கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.
சாத்தான்குளம் கொலை வழக்கில், காவல்துறை ஆய்வாளர் ஸ்ரீதர், துணை ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ் உள்ளிட்ட 5 பேரை முதலில் போலீசார் கைது செய்தனர்.
பிறகு இரண்டாவது சுற்றாக மேலும் 5 பேரை கைது செய்தனர். அதில் சிறப்பு துணை காவல் ஆய்வாளர் பால் துரையும் கைது செய்யப்பட்டார்.
பிறகு துணை காவல் ஆய்வாளர் பால் துரைக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். ஜூலை 24ஆம் தேதி அவருக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து அவர் மதுரை அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
அவர் ஏற்கனவே நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டிருந்ததால் அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் இருந்தபோதும் அவரது உடல் கடுமையாக பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அவருக்கு அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டார் என மதுரை மத்திய சிறைத்துறை கண்காணிப்பாளர் ஊர்மிளா தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த வழக்கு சிபிஐ அதிகாரிகளுக்கு மாற்றம் செய்து விசாரணை நடத்த தமிழக அரசின் பேரில் முதலமைச்சர் உத்தரவிட்டிருந்தார்.
அதன்பிறகு சிபிஐ அதிகாரி சுக்லா தலைமையில் விசாரணை மேற்கொண்டது.
விசாரணை மேற்கொண்ட சிபிஐ அதிகாரிகள் சிலருக்கு கொரோனாத் தொற்று உறுதியானதை அடுத்து, இந்த வழக்கின் விசாரணையை சிறிது காலம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.